பொருளாதார சிக்கல்களைத் தீர்க்க இந்தியாவின் உதவியை நாடியுள்ளது இலங்கை அரசு. சர்வதேச நிதியத்தின் மூலம் நிதியுதவியைப் பெற இலங்கைக்கு மேலும் ஆறுமாத காலங்கள் ஆகலாம்.
இந்த இடைப்பட்ட காலத்தில் உடனடியான நிதித்தேவைகளை ஈடு செய்ய மாற்று வழிகளை அந்நாட்டு அரசு ஆராய்ந்து வருகிறது. இந்நிலையில் இலங்கைத் தூதர் மிலிந்தா மோரகோடா டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சர்வதேச நிதியத்தில் இருந்து நிதியுதவி பெறவும் சர்வதேச ஆதரவைத் திரட்டவும் இந்தியாவை நாடியுள்ளது இலங்கை அரசு. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்வதாக நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.