தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து காண்போம்.
தூக்கமின்மை என்பது தொடர்ந்தால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்கள் வரக் கூடும். எனவே இந்த பிரச்சனையை சரி செய்வது மிகவும் அவசியம்.
- முதலில் நம்முடைய சூழலுக்கு ஏற்ப குறிப்பிட்ட நேரத்தை தூங்குவதற்கு என்று தீர்மானிக்க வேண்டும்.
- அந்த நேரத்தில் படுக்கைக்கு சென்றவுடன் கட்டாயம் விளக்கை அணைத்து விட வேண்டும்.
-
எப்போதும் உறங்க செல்வதற்கு ஒருமணி நேரம் முன்பே எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அதே போல் உறங்க செல்வதற்கு ஒருமணி நேரம் முன்பாக மொபைல் போன், டிவி, லேப்டாப் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களை அணைத்து விட வேண்டும்.
-
சூரிய ஒளி உடலுக்கு மிகவும் நல்லது. ஆகையால் தினமும் காலை குறைந்தபட்சம் 10 மணிக்குள்ளாக வெயிலில் நிற்க வேண்டும். இதன் மூலம் உடலில் மெலடோனின் ஹார்மோன் சுரப்பது சீராகும். எனவே இந்த ஹார்மோன் நன்றாக சுரந்து தூக்கத்தை வர செய்யும்.