கடந்த சில ஆண்டுகளாக உலகெங்கிலும் வளரும் நாடுகள் சீனாவினை சார்ந்திருக்க செய்வதற்கு, அதன் கடன் பொறி இராஜதந்திரத்தினை பயன்படுத்துவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
சீனாவின் நண்பர்களாக இருந்து வரும் இலங்கை, பாகிஸ்தான் பிரச்சனையானது உலகறிந்த விஷயம். இந்த இரு நாடுகளும் மோசமான நிதி நெருக்கடியினை எதிர்கொண்டு வருகின்றன. பணவீக்க பிரச்சனைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆனால் சீனாவோ இந்த சமயத்தில் உதவி செய்வதில் தயக்கம் காட்டியும் வருகின்றது.
காலி கண்டெய்னர்களை வாங்கிக் குவிக்கும் சீனா.. எதற்காக தெரியுமா..?!
சீனாவின் எச்சரிக்கையான அணுகுமுறை
கடந்த மார்ச் மாதத்தில் செலுத்திய 4 பில்லியன் டாலர் கடனை, திரும்ப வழங்குவதில் சீனா இன்னும் உறுதி கொடுக்கவில்லை. அதேபோல இலங்கையின் 2.5 பில்லியன் டாலர் கடன் உதவிக்கும் பதிலளிக்கவில்லை. இரு நாடுகளுக்கும் உதவுவதாக சீனா உறுதியளித்துள்ள நிலையில், மிக கவனமாக சீனா செயல்பட்டு வருகின்றது.
கடனா?
கடந்த 2 ஆண்டுகளாகவே பெய்ஜிங் அதன் நாட்டிற்கு வெளியேயான கடனை மறுபரிசீலனை செய்து வருகின்றது. ஏனெனில் அவர்களின் வங்கிகள் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கும் நாடுகளுடன், ஏற்கனவே பெருத்த கடன் சுமை இருப்பதை உணர்ந்துள்ளன. ஆக இதனால் எச்சரிக்கையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
சீனாவே நெருக்கடியில் தான்
தற்போது சீனாவே பல நெருக்கடிகளில் சிக்கித் தவித்து வரும் நிலையில், சீனா வங்கிகள் கடன் கொடுப்பதை குறைத்து வருகின்றன. விதிமுறைகளை கடுமையாக்கி வருகின்றன. தற்போது அங்கு மோசமான கொரோனா பரவலும் பரவி வருகின்றது. இதன் காரணமாக மோசமான தாக்கத்தினை கட்டுப்படுத்த, மிக கடுமையாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வளர்ச்சி சரியலாம்
இதற்கிடையில் சீனாவின் முக்கிய வணிக நகரங்கள், டெக் நிறுவனங்கள் , தொழில் நிறுவனங்கள், நிதி சேவைகளை என பலவும் முடங்கியுள்ளன. இதற்கிடையில் சீனாவின் வளர்ச்சி விகிதமானது 5.5% ஆக சரியலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இது சீனாவினை இன்னும் எச்சரிக்கையாக செயல்பட ஊக்குவிக்கிறது.
மிகப்பெரிய கடன் வழங்குனர்
சமீபத்திய ஆண்டுகளாக சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியினை காட்டிலும், சீனா வளரும் நாடுகளுக்கு அதிக கடனை வழங்கி வருகின்றது. இதன் மூலம் மிகப்பெரிய கடன் வழங்குனராகவும் உருவெடுத்துள்ளது. எனினும் தற்போது அதன் விதிமுறைகளை கடினமாக்கியுள்ளது.
ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம்
இதற்கிடையில் ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் இலங்கையின் கடன் மதிப்பீட்டினை குறைத்துள்ளது. இது இலங்கைக்கான வெளிநாட்டு கடன்களை குறைக்கலாம். இதற்கிடையில் இலங்கையின் அடுத்த பேமெண்ட் நிலுவை செலுத்த வேண்டிய ஏப்ரல் 18 அன்று செலுத்த முடியாமல் போகலாம். அப்படி செலுத்த தவறும் பட்சத்தில் அது மறுசீரமைக்கப்படலாம் என எஸ் & பி தெரிவித்துள்ளது.
இனி ரொம்ப கடினம்
இனி சீனா புதிய கடன் வழங்குதல்களை அங்கீகரிப்பது கடினம். சமீபத்திய பெல் அண்ட் ரோடு திட்டத்திற்கான கருத்தரங்கில், ஜி ஜின்பிங் ஆபத்தான மற்றும் குழப்பமான இடங்களை தவிர்க்கவும் பங்கேற்பாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதே இம்மாத தொடக்கத்தில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிகுன், இலங்கையை உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்தினை தொடர்பு கொள்ள ஊக்குவித்தார்.
IMF-வுடன் இணைந்து செயல்பட திட்டம்
இதற்கிடையில் தான் அத்தியாவசிய உணவு மற்றும் எரிபொருள் இறக்குமதிக்காக, விரைவில் இதுகுறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல பாகிஸ்தானின் புதிய அரசும் பொருளாதாரத்தினை மேம்படுத்த IMF-வுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
யார் உதவி செய்யப்போகிறார்கள்?
மிகுந்த நிதி நெருக்கடி, கடன் பிரச்சனை, பணவீக்கம், உணவு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுபாடு, அத்தியாவசிய மருந்து பொருட்கள் என பலவற்றிற்கும் கஷ்டப்படும் இலங்கை மற்றும் பாகிஸ்தானின், மோசமான நிதி நிலையை மேம்படுத்த எந்த நாடு கைகொடுக்குமோ? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
China reluctant to lend back to Sri Lanka and Pakistan
China reluctant to lend back to Sri Lanka and Pakistan/இலங்கை, பாகிஸ்தானை கைகழுவும் சீனா.. களங்கிக் போன நட்பு நாடுகள்..!