தங்கள் மீதான மக்களின் கோபத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, திமுக மொழியை ஆயுதமாக பயன்படுத்தி அரசியல் செய்து வருவதாக, பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தெரிவிக்கையில், “மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்கள் கூறியதை நிறைய பேர் தவறாக புரிந்து கொண்டார்கள்.
அமித்ஷா எந்த அர்த்தத்தில் சொன்னார் என்றால், ஹிந்தி மொழி என்பது லிங்க் லாங்குவேஜ், மக்கள் தொகை அடிப்படையில் அதிகப்படியாக மக்களால் பேசக்கூடிய மொழி ஹிந்தி மொழியாக இருக்கிறது. அந்த அர்த்தத்தில்தான் அவர் தெரிவித்திருந்தார்.
இத்தனைக்கும் அமித்ஷா அவர்கள் தாய்மொழியே குஜராத்தி தான். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாய் மொழி குஜராத்தி தான்.
திமுக மீது மக்களுக்கு கோபம் இருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைய வெளியே வருவது என்ற உடன் அதை திசை திருப்பும் அரசியல் காரணமாக திமுகவினர் மொழிப் பிரச்சினையை தற்போது கையில் எடுத்துள்ளனர்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.