புதுடில்லி: நீதித்துறை சந்தித்து வரும் பல்வேறு சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கத்தில், மாநில முதல்வர்கள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு, இம்மாதம் 30ல் நடக்கிறது.
மாநில முதல்வர்கள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு, இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம். கடைசியாக 2016, ஏப்., 24க்கு பின் இந்த மாநாடு நடக்கவில்லை. ஆறு ஆண்டுகளுக்கு பின் வரும் 30ல் மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
‘விரைவாக நீதி வழங்குதல், கீழமை நீதிமன்றங்கள் மற்றும் 25 உயர் நீதிமன்றங்களில் காலிப் பணி இடங்களை நிரப்புதல், நீதித்துறை உள்கட்டமைப்பு மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பது உள்ளிட்ட சவால்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும்’ என, எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடில்லி: நீதித்துறை சந்தித்து வரும் பல்வேறு சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கத்தில், மாநில முதல்வர்கள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு, இம்மாதம் 30ல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.