Courtesy: MailOnline
கருங்கடலை பகுதியை ஆட்சி செய்த ரஷ்யாவின் மிகப்பயங்கரமான ஏவுகணை போர் கப்பலான மாஸ்க்வா தண்ணிரில் மூழ்கி விட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் மிக முக்கிய மற்றும் மிகப் பயங்கரமான போர்க்கப்பலாக கருதப்பட்ட ஏவுகணைகளை ஏந்திய மாஸ்க்வா(Moskva) உக்ரைன் மீதான தாக்குதலில் முதன்மை ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது.
இதையடுத்து கருங்கடலை ஆட்சி செய்த ஏவுகணை தாங்கிய போர்க்கப்பலான மாஸ்க்வா, உக்ரைன் படைகளின் முக்கிய குறியாக இருந்த நிலையில், அதனை உக்ரைனிய பாதுகாப்பு ராணுவ படை 2 நெப்டியூன் எதிர்ப்பு ஏவுகணைகளால் அழித்துவிட்டதாக தெரிவித்தது.
🔴 Moment of target of the largest Russian warship named Moskva with the R-360 Neptune anti-ship missile in the Black Sea
🇺🇦🇺🇦✌🏼✌🏼✌🏼 pic.twitter.com/jO0JwcH3ST
— Слава Україні (@abadan_ebi) April 14, 2022
ஆனால் மாஸ்க்வா போர்க்கப்பலில் வைக்கப்பட்டு இருந்த வெடிமருந்து வெடித்ததில் தான் கப்பல் தீப்பற்றி சேதமடைந்து இருப்பதாக ரஷ்யா தெரிவித்தது.
இந்தநிலையில், 510 ஊழியர்கள் மற்றும் ராணுவ வீரர்களை கொண்ட ஏவுகணைகளை ஏந்திய மாஸ்க்வா போர்க்கப்பல் தண்ணிரில் மூழ்கியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்யா வெளியிட்ட அறிக்கையில், சேதமடைந்த மாஸ்க்வா போர்க்கப்பலை துறைமுகத்திற்கு இழுத்துவரும் போது கடலில் ஏற்பட்ட சீற்றத்தில் கப்பல் மூழ்கியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளும் மாஸ்க்வா போர்க்கப்பல் குறித்து தொடர்ந்து இருவேறு கருத்துக்களை தெரிவித்து வருவதால் இதுவரை மாஸ்க்வா போர்க்கப்பலுக்கு என்ன நடந்தது என்பது உறுதியாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பின்லாந்து வளைகுடாவில் ரஷ்ய கடற்படைகள்: பாதுகாப்பு துணைத்தலைவர் எச்சரிக்கை!
credits: MailOnline
credits: MailOnline
credits: MailOnline
credits: MailOnline
credits: MailOnline