கருப்பு மற்றும் வெள்ளை மக்களை உலகம் சமமாக நடத்தவில்லை: WHO தலைவர் வருத்தம்!



 உலகம் அனைத்திற்கும் சரிசமான முக்கியத்துவத்தை வழங்கவில்லை என உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) வருத்தம் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவாவில் நடைபெற்ற இணையதள செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ், உலகம் கருப்பு மற்றும் வெள்ளை நிற மக்களின் மீது சமமான கவனம் செலுத்தவில்லை என குற்றம் சாட்டினார்.

அவ்வாறு உலகம் கருப்பு மற்றும் வெள்ளை நிற மக்களின் மீது சமமான கவனம் செலுத்துகிறது என்றால் உக்ரைன் பிரச்சனைக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை ஒப்பிடுகையில் அளவில் ஏன் மிகச் சிறிய பங்கே எத்தியோப்பியா, ஏமன், ஆப்கானிஸ்தான் சிரியா போன்ற நாடுகளின் பிரச்சனைகளுக்கு வழங்கப்படுகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.

  உக்ரைன் முரண்பாடு உலகின் மிக முக்கிய முரண்பாடுதான் ஆனால் அதற்கு வழங்கும் முக்கியத்தும் ஏன் பிற நாடுகளின் முரண்பாடுகளுக்கும் சமமாக வழங்கப்படவில்லை, உலகம் அனைத்து மனித உயிர்களையும் சமமாக நடத்தவில்லை என்பதில் நான் இங்கு நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்கவேண்டும் எனவும் சிலரை விட சிலர் சமமாக நடத்தப்படுவதாகவும் டெட்ரோஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். 

அதேசமயம் எத்தியோப்பியாவில் மனித உயிர்கள் உயிருடன் எரிக்கப்பட்ட போது ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் அதனை எத்தனை தீவிரத்துடன் அணுகியது என தெரியவில்லை மேலும் எத்தியோப்பியாவில் நடைபெறும் அட்டூழியங்களை ஊடகம் மற்றும் பத்திரிக்கைகள் சரியான முறையில் ஆவணம் செய்ய தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

ஆனால் விரைவில் இவை அனைத்தையும் உணர்ந்து அனைத்து உயிர்களையும் உலகம் சமமாக நடத்தும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.     



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.