ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கர்நாடக ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த அமைச்சரான ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய சந்தோஷ் பாட்டீல் என்ற ஒப்பந்ததாரர், விடுதி அறை ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது உயிரிழப்பிற்கு அமைச்சர் ஈஸ்வரப்பா தான் காரணம் என தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டதால், அதன் அடிப்படையில் காவல்துறையினர் அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஈஸ்வரப்பா பதவி விலகக்கோரி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரப்பா, நாளை முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளதாக அறிவித்தார்.