அரசு ஒப்பந்ததாரர் தற்கொலைக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டதால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாக கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார்.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடக மாநிலத்தில், ஊரக வளர்ச்சி மற்றும பஞ்சாயத்ராஜ் அமைச்சராக இருப்பவர் கே.எஸ்.ஈஸ்வப்பா. பெலகாவியாவை சேர்ந்த அரசு ஒப்பந்தர் சந்தோஷ் பாட்டீல் என்பவருக்கு அரசு ஒப்பந்தங்களை பெறுவதற்கு 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக ஈஸ்வரப்பா மீது கடந்த மார்ச் 30ந் தேதி குற்றம் சாட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 12-ந் தேதி சந்தோஷ் பாட்டீல் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். மேலும் அவர் தனது மரணத்திற்கு காரணம் அமைச்சர் ஈஸ்வரப்பா தான் என்று குறிப்பிட்டிருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இநத வழக்கு கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளர்.
மேலும் சந்தோஷ் பாட்டீலின் கடிதம் தொடர்பான அமைச்சர் ஈஸ்வரப்பா மீது, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பு நிலவி வரும் நிலையில், இந்த அரசியல் நெருக்கடிக்கு இடையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார். நாளை முதல்வர் பசுவராஜ் பொம்மையிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
“ “