குட் நியூஸ்.. வட்டியை அதிகரித்த கோடக் மகேந்திரா வங்கி.. நல்ல வாய்ப்பு தான்..!

முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கோடக் மகேந்திரா வங்கி அதன் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.

இந்த வட்டி அதிகரிப்பானது 2 கோடி ரூபாய்க்குள்ளான டெபாசிட்டுகளுக்கு பொருந்தும் என்றும் அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதமானது ஏப்ரல் 12, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வட்டி அதிகரிப்பானது உள்நாட்டு வாடிக்கையாளர்கள், NRO மற்றும் NRE-க்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வட்டி விகிதமானது NRO மற்றும் NRE- மூத்த குடிமக்களுக்கு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் பெரும் நிம்மதி.. வட்டி மாற்றமின்மையால் மாற்றமின்றி காணப்படும் சென்செக்ஸ், நிஃப்டி!

 பொதுமக்களுக்கு வட்டி எவ்வளவு?

பொதுமக்களுக்கு வட்டி எவ்வளவு?

7 நாள் முதல் 14 நாட்களுக்கு – 2.50%

15 நாள் முதல் 30 நாட்களுக்கு – 2.50%

31 நாள் முதல் 45 நாட்களுக்கு – 2.75%

46 நாள் முதல் 90 நாட்களுக்கு – 2.75%

91 நாள் முதல் 120 நாட்களுக்கு – 3%

121 நாள் முதல் 179 நாட்களுக்கு – 3.5%

180 நாட்கள் – 4.50%

181 நாள் முதல் 269 நாட்களுக்கு – 4.50%

270 நாட்கள் – 4.50%

271 நாள் முதல் 363 நாட்களுக்கு – 4.50%

364 நாட்களுக்கு – 4.75%

365 நாள் முதல் 389 நாட்களுக்கு – 5.10%

390 நாட்கள் முதல் 23 மாதங்களுக்குள் – 5.20%

23 மாதம் – 5.25%

23 மாதம் 1 நாள் முதல் – 2 வருடத்திற்குள் – 5.25%

2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் – 5.30%

3 வருடம் முதல் 4 வருடத்திற்குள் – 5.45%

4 வருடம் முதல் 5 வருடத்திற்குள் – 5.50%

5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் – 5.60%

 மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம்
 

மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம்

7 நாள் முதல் 14 நாட்களுக்கு – 3%

15 நாள் முதல் 30 நாட்களுக்கு – 3%

31 நாள் முதல் 45 நாட்களுக்கு – 3.25%

46 நாள் முதல் 90 நாட்களுக்கு – 3.25%

91 நாள் முதல் 120 நாட்களுக்கு – 3.50%

121 நாள் முதல் 179 நாட்களுக்கு – 4%

180 நாட்கள் – 5%

181 நாள் முதல் 269 நாட்களுக்கு – 5%

270 நாட்கள் – 5%

271 நாள் முதல் 363 நாட்களுக்கு – 5%

364 நாட்களுக்கு – 5.25%

365 நாள் முதல் 389 நாட்களுக்கு – 5.60%

390 நாட்கள் – 5.70%

391 நாட்கள் முதல் 23 மாதங்களுக்குள் – 5.70%

23 மாதம் – 5.75%.0

23 மாதம் 1 நாள் முதல் – 2 வருடத்திற்குள் – 5.75%

2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் – 5.80%

3 வருடம் முதல் 4 வருடத்திற்குள் – 5.95%

4 வருடம் முதல் 5 வருடத்திற்குள் – 6%

5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் – 6.10%

 ரெப்போ விகிதம் அதிகரிக்கப்படவில்லை

ரெப்போ விகிதம் அதிகரிக்கப்படவில்லை

ரிசர்வ் வங்கியானது பணவீக்கத்தினை கருத்தில் கொண்டு 11 வது முறையாக வட்டி விகிதத்தினை கடந்த முறையும் அதிகரிக்கவில்லை. இருப்பினும் டெபாசிட் தாரர்களை ஊக்குவிக்கும் விதமாக வட்டி விகிதத்தினை இவ்வங்கி அதிகரித்துள்ளது. இது வங்கி பிக்ஸட் டெபாசிட் செய்பவர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது

 மற்ற வங்கிகளில் என்ன நிலவரம்?

மற்ற வங்கிகளில் என்ன நிலவரம்?

நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியில் பொதுமக்களுக்கான வட்டி விகிதம் 2.50% முதல் 5.6.%மும், மூத்த குடிமக்களுக்கு 3% முதல் 6.35%மும் வழங்கப்படுகிறது.

இதே எஸ்பிஐ-யில் பொதுமக்களுக்கான வட்டி விகிதம் 2.90% முதல் 5.50.%மும், மூத்த குடிமக்களுக்கு 3.40% முதல் 6.30%மும் வழங்கப்படுகிறது.

ஆக்ஸிஸ் வங்கியில் பொதுமக்களுக்கான வட்டி விகிதம் 2.50% முதல் 5.75%மும், மூத்த குடிமக்களுக்கு 2.50% முதல் 6.50%மும் வழங்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

good news! Kotak mahindra bank hikes Fixed deposit rates: check latest FD rates

good news! Kotak mahindra bank hikes Fixed deposit rates: check latest FD rates/குட் நியூஸ்.. வட்டியை அதிகரித்த கோடக் மகேந்திரா வங்கி.. நல்ல வாய்ப்பு தான்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.