புதுடெல்லி: சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு கடந்தாண்டு நவம்பரில் திரும்ப பெற்றது. அப்போது, குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதற்காக உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்றும், அதில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் சேர்க்கப்படுவார்கள் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். இது பற்றி ஒன்றிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று அளித்த பேட்டியில், “குறைந்தபட்ச ஆதார விலைக்கான நிர்ணய குழுவில் இடம் பெறுவதற்காக விவசாய சங்கங்களிடம் இருந்து 2 அல்லது 3 பிரதிநிதிகளின் பெயர்களை பரிந்துரை செய்யும்படி ஒன்றிய அரசு கேட்டிருந்தது. ஆனால், பல மாதங்களாகியும் இன்னும் அவற்றிடம் இருந்து பதில் வரவில்லை. பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டதும் குழு அமைக்கும் பணி உடனடியாக தொடங்கப்படும்,’’ என்றார்.