கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம்பெற வரும் 60 நாட்களுக்குள் மனுக்களை சமர்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதிக்கு முன்னர் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெற, அடுத்த 60 நாட்களுக்குள் மனுக்களை சமர்பிக்க வேண்டும் என்றும், கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது ஒரு மாதத்திற்குள் தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட நிர்வாகத்துக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிவாரணம் கோரி மனுக்களை சமர்ப்பிக்க இயலாதவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து தீர்வு காணலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM