கடந்த 16 மாதங்களில் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவருக்குமே அவர்களுடைய தோள்பட்டையில் ஊசி குத்தப்பட்டது நினைவில் இருக்கும். ஏனென்றால், கோவிட்-19 தடுப்பூசிகள் உட்பட, பெரும்பாலான தடுப்பூசிகள், டெல்டாய்டு எனப்படும் மேல் கை அதாவது தோள்பட்டை தசையில் உள்ள தசைகளுக்குள் செலுத்தப்படும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக தடுப்பூசிகள் தசைகளில் போடப்படுவது ஏன்?
தடுப்பூசிகள் தசைகளில் போடப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமான் அகாரணம், தசைகள் பெரிய அளவில் ரத்தம் செல்கிற பகுதியாகும். ஆன்டிஜெனைச் சுமந்து செல்லும் தடுப்பூசி தசை பகுதிகளில் செலுத்தப்படும் போதெல்லாம், தசை ஆன்டிஜெனை வெளியிடுகிறது. இது தசை வாஸ்குலேச்சர் அல்லது தசையில் உள்ள இரத்த நாளங்களின் ஏற்பாட்டால் பரவுகிறது. ஆன்டிஜென் பின்னர் டென்ட்ரிடிக் செல்கள் எனப்படும் ஒரு வகை நோயெதிர்ப்பு உயிரணுக்களால் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அவை நோயெதிர்ப்பு மண்டலத்தின் பிற செல்களுக்கு அவற்றின் மேற்பரப்பில் ஆன்டிஜென்களைக் காட்டுவதன் மூலம் செயல்படுகின்றன. டென்ட்ரிடிக் செல்கள் ஆன்டிஜெனை நிணநீர் திரவத்தின் மூலம் நிணநீர் முனைக்கு கொண்டு செல்கின்றன.
“பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் மூலம், நிணநீர் முனைகளில் டி செல்கள் மற்றும் பி செல்கள் உள்ளன – அவை உடலின் முதன்மை பாதுகாப்பு செல்கள் என்பதை புரிந்துகொள்ளப்பட்டது. இந்த ஆன்டிஜென்களை குறிப்பாக டி செல்கள் மற்றும் பி செல்களுக்கு வழங்கப்பட்டவுடன், ஒரு குறிப்பிட்ட வைரஸுக்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கத் தொடங்குகிறோம். அந்த வகையில், SARS-CoV-2, வைரஸ் போன்ற புதிய வைரஸ் வந்துள்ளது. புதிய கோவிட்-19 வைரஸ் அல்லது முந்தைய வைரஸ்களை கட்டுப்படுத்துவதற்கு நாம் தடுப்பூசி திட்டங்களை நடத்தி வருகிறோம்” என்று மும்பை ஃபோர்டிஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு இயக்குநரும் தேசிய கோவிட் -19 பணிக்குழுவின் உறுப்பினருமான டாக்டர் ராகுல் பண்டிட் கூறினார்.
பெரிய அளவில் ரத்தம் செல்கிற அமைப்பைக்கொண்ட தசைகளுக்கு ஒரு பாதுகாப்பு பொறிமுறையையும் வழங்குகிறது. இதன் பொருள் அலுமினிய உப்புகள் போன்ற தடுப்பூசியின் சேர்க்கைகள் கடுமையான உடல் எதிர்வினைகளுக்கு வழிவகுக்காது. மாறாக, தடுப்பூசியானது தோலுக்கு அடியில் கொழுப்பு திசுக்களில் [தோலுக்கும் தசைக்கும் இடையில்] செலுத்தப்பட்டால், இது ஒரு மோசமான ரத்த விநியோகம், ஆன்டிஜென் தடுப்பூசியை உறிஞ்சுவது மோசமாக இருக்கும். எனவே நோய் எதிர்ப்பு சக்தி தோல்வியடைலாம். இதேபோல், நச்சுத்தன்மையுடைய சேர்க்கைகள் எதிர்வினையை ஏற்படுத்தக்கூடும்” என்று டாக்டர் பண்டிட் கூறினார்.
தடுப்பூசி உள்ளே செலுத்தப்படும்போதும் இதுவேதான் நடக்கும் (வெளிப்புற தோல் அடுக்குக்கு கீழே, மேல்தோல்). எனவே, பெரும்பாலான தடுப்பூசிகள் செலுத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாதை தசைநார் பாதை ஆகும்.
தோல் அல்லது தோல் அடியில் உள்ள திசுக்களுடன் ஒப்பிடும்போது, தசைகள் குறைவான வலி ஏற்பிகளைக் கொண்டிருக்கின்றன, எனவே தசைநார் வழியாக உட்செலுத்துதல் தோல் அடியில் அல்லது தோலுக்கு அடியில் போடப்படும் ஊசியைப் போல காயப்படுத்தாது.
தடுப்பூசிகள் குறிப்பாக தோள்பட்டையில் அதாவது மேல் கையில் போடப்படுவது ஏன்?
நோய் ரேபிஸ் போன்ற சில தடுப்பூசிகளில், நோயெதிர்ப்பு சக்தி – எந்தவொரு செல் அல்லது திசுக்களின் நோயெதிர்ப்பைத் தூண்டும் திறன் – அதை கையில் செலுத்தும்போது அதிகரிக்கிறது. தொடை அல்லது பிட்டத்தில் அமைந்துள்ள தோலடி கொழுப்பு திசுக்களில் செலுத்தப்பட்டால், இந்த தடுப்பூசிகள் குறைந்த நோயெதிர்ப்பு சக்தியைக் காட்டுகின்றன. இதனால், தடுப்பூசி தோல்வியடையும் வாய்ப்பு உள்ளது” என்று மும்பை நானாவதி மேக்ஸ் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர், டாக்டர் ஹர்ஷத் லிமாயே கூறினார்.
“தடுப்பூசியின் அளவு சிறியதாக இருப்பதால் (0.5 மிமீ) மற்றும் ஊசி போடும் இடத்தில் கடுமையான வீக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதால், சிரமத்தை ஏற்படுத்துவதன் விளைவாக தடுப்பூசி கையில் போடப்படுகிறது” என்று டாக்டர் லிமாயே கூறினார்.
தோல் மற்றும் தசைகளுக்கு இடையில் உள்ள கொழுப்பு அடுக்கு பற்றிய பல ஆய்வுகள், பெரும்பாலான பெரியவர்களில் (ஆண்கள் மற்றும் பெண்கள்), கொழுப்பு அடுக்குகள் டெல்டோயிட் தசையைச் சுற்றி மிகவும் மெல்லியதாகத் தெரிகிறது. “குளுடியல் பகுதியில் (பிட்டம்) தசை நிறைய உள்ளது. அங்கே டெல்டாயிடை விட அதிகமாக இருந்தாலும், கொழுப்பு அடுக்கும் பெரிய அளவில் உள்ளது. எனவே தடுப்பூசியை தசையில் போடுவதற்கு நீண்ட ஊசி தேவைப்படலாம். இருப்பினும், பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு தோள்பட்டை தசையின் அருகே குறைந்த கொழுப்பு அடுக்கு உள்ளது. எனவே பெண்களுக்கு சில நேரங்களில் தடுப்பூசியை டெல்டோயிட் தசையில் போடுவதற்கு நீண்ட ஊசி தேவைப்படலாம்” என்று டாக்டர் பண்டிட் கூறினார்.
தடுப்பூசியை ஏன் நேரடியாக நரம்புக்குள் செலுத்தக்கூடாது?
இது ‘தேக்க விளைவு’ (depot effect) ஏற்படுத்தும் அல்லது நீண்ட கால செயல்திறனைச் செயல்படுத்துவதற்கு மருந்துகளை மெதுவாக வெளியிடும். நரம்பு வழியாக செலுத்தப்படும் போது, தடுப்பூசி விரைவாக சுழற்சியில் உறிஞ்சப்படுகிறது. தசைகளில் செலுத்தப்படும் முறை தடுப்பூசியை உறிஞ்சுவதற்கு சிறிது நேரம் எடுக்கும்.
தடுப்பூசி போடும் திட்டம் எங்கே நடத்தப்பட்டாலும் அது மக்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது. தடுப்பூசியை இருப்பு செய்ய, எளிதான வழி வாய்வழி கொடுப்பதாகும் (போலியோ தடுப்பு மருந்து போன்றவை வாய்வழியாகக் கொடுக்கப்படுகிறது). இருப்பினும், நரம்பு வழியாக அல்லது தசைக்குள் செலுத்தப்பட வேண்டிய பிற தடுப்பூசிகளுக்கு பொது சுகாதார தசைநார் பாதை தேர்ந்தெடுக்கப்படுகிறது” என்று டாக்டர் பண்டிட் கூறினார்.
எந்த தடுப்பூசிகள் மற்ற வழிகளில் வழங்கப்படுகின்றன?
மிகப் பழமையான தடுப்பூசிகளில் ஒன்று, பெரியம்மைக்கான, தோலைப் புண்படுத்துவதன் மூலம் கொடுக்கப்பட்டது. இருப்பினும், காலப்போக்கில், பயனாளிகளுக்கு தடுப்பூசி போட சிறந்த வழிகள் இருப்பதை மருத்துவர்கள் உணர்ந்தனர். இவற்றில் தோல் அடி வழியாக, தோல் பாதை, தசைநார் பாதை, வாய்வழி மற்றும் நாசி வழிகள் ஆகியவை அடங்கும்.
“தோல் அடி பாதையில் தொடர்ந்து போடப்படும் இரண்டு விதிவிலக்குகள் மட்டுமே உள்ளன. இவை பிசிஜி மற்றும் காசநோய்க்கான தடுப்பூசிகள், ஏனெனில், இந்த இரண்டு தடுப்பூசிகளும் தோல் அடி பாதையில் செலுத்தப்படும்போது அனுபவ ரீதியாக நன்றாக வேலை செய்கின்றன” என்று டாக்டர் பண்டிட் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“