சண்டிகர்: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் சிக்கிய பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியிடம் அமலாக்கத் துறை 6 மணி நேரம் விசாரணை நடத்தியது. பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆட்சியில் சட்ட விரோத மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக, கடந்த 2018ல் பஞ்சாப் போலீசார் சன்னி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக சன்னி மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அது தொடர்பாக சண்டிகர், மொகாலி, லூதியானா, பதான்கோட் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த ஜனவரி மாதம் சோதனை நடத்தியது. அப்போது, ஹனி வீட்டில் ரூ.4 கோடியும், அவரது கூட்டாளி சந்தீப் குமாரின் வீட்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும், ரூ.6 கோடி ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கில் ஹனியை கடந்த பிப்ரவரியில் அமலாக்கத்துறை கைது செய்தது. இந்நிலையில், ஜலந்தரில் உள்ள அமலாக்கத் துறையின் மண்டல அலுவலகத்தில் சன்னி நேற்று முன்தினம் இரவு விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 6 மணி நேரம் அதேபோல், ஹனி மற்றும் வேறு சிலருடன் உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்கப்பட்டது. அவர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.