பங்கு சந்தை என்றால் என்ன? எப்படி ஒரு நிறுவனம் பங்கு சந்தைக்குள் நுழைகிறது எனபதனை இதற்கு முந்தைய சீரிஸ்களில் பார்த்தோம். இன்று டீமேட் கணக்கு என்றால் என்ன? இதனை எப்படி தொடங்குவது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
தமிழ்நாட்டின் புதிய டார்கெட்.. 5 வருடத்தில் 10000 ஸ்டார்ட்அப்..!
டீமேட் கணக்கு என்பது பங்கு சந்தையில் வணிகம் செய்ய தேவையான ஒரு கணக்கு ஆகும். நீங்கள் ஒரு பங்கினை வாங்கினாலும், விற்றாலும் அது உங்களது டீமேட்டில் தான் பதிவாகும். இதனை டிமெட்டீரியலைசேஷன் என்பார்கள். இங்கு நீங்கள் வாங்கும் பங்குகள், பத்திரங்கள் என அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிடும்.

எங்கு தொடங்கலாம்?
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான வங்கிகளே இந்த சேவையினை வழங்கி வருகின்றன. ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி என பல வங்கிகளிலும் டீமேட்டினை தொடங்கிக் கொள்ளலாம். டீமேட் தொடங்கும் இவர்களை டெபாசிட்டரி பார்ட்டிசிப்பண்ட்-(depository participant) என்றும் குறிப்பிடுவார்கள். இந்த சேவையினை வங்கிகள் மட்டும் அல்ல, பங்குதாரர்களே ஒபன் செய்தும் கொடுக்கிறார்கள். ஆக உங்களது அருகில் இருக்கும் இடத்தில் தொடங்கிக் கொள்ளலாம்.

என்னென்ன ஆவணங்கள் தேவை?
இந்த டீமேட் கணக்கு தொடங்க கட்டணம் வசூலிக்கப்படும். இது 500 ரூபாய்க்குள் இருக்கும். டீமேட் தொடங்க நீங்கள் உங்களது ஆதார் கார்டு, பான் கார்டு, போட்டோ, கேன்சல் செக் லீப், வங்கி பரிவர்த்தனை ஸ்டேட்மெண்ட் உள்ளிட்ட ஆவணங்களை கொடுக்க வேண்டியிருக்கும். ஒருவர் எத்தனை டீமேட் கணக்கினை வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். இந்த கணக்கு ஒரு வாரத்தில் செயல்பாட்டுக்கு வரும்.

டிரேடிங் அக்கவுண்டும் வேண்டும்
சரி டீமேட் தொடங்கியாச்சு? இப்போது நான் பங்குகளை வாங்க முடியுமா? என்றால் நிச்சயம் இல்லை. இதற்காக டிரேடிங் அக்கவுண்டினையும் தொடங்க வேண்டும். இதற்காக நீங்கள் தனியாக அலைய வேண்டியதில்லை. ஸ்டாக் புரோக்கர்களே தொடங்கிக் கொடுத்து விடுவார்கள். இதற்கும் மேற்கண்ட ஆவணங்களே போதுமானது.

நேரடியாக வாங்க முடியாதா?
பலருக்கும் ஒரு கேள்வி இருக்கும். ஏன் புரோக்கர் மூலமாகத் தான் வர்த்தகம் செய்யணுமா? நாமே நேரடியாக பங்குகளை வாங்க முடியாதா? என்று. இதில் பல தவறுகள் ஏற்படுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.. சரி புரோக்கர்கள் தவறு செய்ய மாட்டார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஸ்டாக் புரோக்கர்களாக வெறுமனே யாரும் இணைந்து விட முடியாது. மாறாக செபியிடம் அனுமதி பெற்றவர்களே புரோக்கராக செயல்பட முடியும். இண்றைய காலக்கட்டத்தில் சிறு சிறு நகரங்களில் கூட ஸ்டாக் புரோக்கர்கள் இருக்கிறார்கள். ஆக அவர்கள் மூலம் எளிதில் டீமேட் மற்றும் டிரேடிங் கணக்கினையும் தொடங்கிக் கொள்ளலாம்.
Series on the stock market: what is Demat? how to open a demat account?
Series on the stock market: what is Demat? how to open a demat account?/சீரிஸ் 2 : டீமேட் என்றால் என்ன.. இதனை எப்படி தொடங்குவது?