மங்கலகரமான ‘சுபகிருது புத்தாண்டு, 14.04.2022 வியாழக்கிழமை அன்று பிறக்கிறது.
குரு வாரத்தில், குரு பகவான் தன் சொந்த வீடான மீன ராசியில் இருக்கும் நேரத்தில் பிறக்கும் இந்தப் புத்தாண்டு பல்வேறு நன்மைகள் தரப்போகிறது.
கிரகப்பபெயர்ச்சி
சுபகிருது தமிழ் புத்தாண்டில் ஆண்டு கோள்களின்ல சுப கிரகமான குரு பகவான் மீன ராசியில் பயணம் செய்வார்.
சனிபகவான் மகரம், கும்பம் ராசியிலும் பயணம் செய்கிறார். ராகு மேஷ ராசியிலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்வார்.
சனிபகவான் சித்திரை மாதம் 16ஆம் தேதி ஏப்ரல் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 7.54 மணிக்கு அதிசாரமாக மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார்.
ஆனி 28ஆம் திகதி ஜூலை 27ஆம் தேதியன்று செவ்வாய்கிழமை வக்ர கதியில் மீண்டும் மகர ராசிக்கு திரும்புகிறார்.
திருக்கணித பஞ்சாங்கப்படி 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி நேர்கதியில் சனிபகவான் கும்ப ராசிக்கு செல்கிறார்.
சுகமான ஆண்டு
சுபகிருது வருடத்தில் பிறந்த மனிதன் சௌபாக்கியம், கல்வி, அளவற்ற புண்ணிய கர்மங்களினாலே வெகுகாலம் ஜீவித்திருப்பவனும் பிள்ளைகளும் அதிகம் செல்வமும் உடையனுமாவான்.
சுபகிருது வருடத்தில் நோய்க் கிருமிகள் அதிக அளவில் பரவினாலும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு பாதிப்புகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்.
இந்த ஆண்டு முழுவதுமே குருபகவான் தன் சொந்த வீடான மீன ராசியிலேயே சஞ்சரிக்கிறார். ஆகவே, கல்வி வளர்ச்சி, பொருளாதாரம், குழந்தைகளின் வளர்ச்சி ஆகியவை நல்ல முறையில் காணப்படும்.
மழை பெய்யும்
சுப கிருது ஆண்டின் ராஜா சனிபகவான். மந்திரி குரு பகவான், சேனாதிபதி,அர்க்காததிபதி,மேகாதிபதி புதன் பகவான். தானியாதிபதி சுக்கிரன். ரஸாதிபதி சந்திரன் ஆவார். ராஜா சனியாக இருப்பதால் மழை வளம் பெருகும்.
உணவுப்பொருட்கள் உற்பத்தி, பணப்பயிர் உற்பத்தி அதிகரிக்கும். அரசின் புதிய சட்டங்களால் மக்களுக்கு பாதிப்பு அதிகரிக்கும். எல்லையில் அந்நியர் ஆதிக்கம் அதிகரிக்கும். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள்.
குற்றங்கள் குறையும்
குரு பகவானின் பார்வையால் உலகத்தில் இருந்துவந்த துன்பங்கள் விலகி, படிப்படியாகக் கஷ்டங்கள் தீரும். கடத்தல் முதலான குற்றத் தொழில்கள் கட்டுப்படுத்தப்படும்.
அமைச்சராக குரு வருவதால் விவசாயத்திற்கு தேவையான காலத்தில் தேவையான அளவு மழை பொழியும். நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வங்கித் தொழில் சிறப்படையும். மக்கள் சுகத்தோடும் சந்தோஷத்தோடும் இருப்பார்கள்.
தென்மேற்குப் பருவமழை வெள்ளம்
ஆனி மாதம் இடி மின்னலுடன் புயல் காற்றும் பெருமழையும் ஏற்படும். நாட்டின் மத்திய பகுதி செழிப்பாக இருக்கும். கடற்கரைப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படும். தென்மேற்குப் பருவமழை சிறப்பாக இருக்கும்.
கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகம், குஜராத் கடற்கரைப்பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்படும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது.
விலை குறையும்
பழ வகைகள், கிழங்கு வகைகள் உற்பத்தி அதிகமாகி விலை குறையும்.
விவசாயத்தில் புதிய முறைகளை புகுத்தி விளைச்சலினால் அதிக பொருளாதார வளம் பெறுவார்கள்.
பொன்னான காலம்
நம் நாட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் கட்டுக்குள் வரும்.
மருத்துவத் துறையில் பணியாற்றுபவர்களுக்குப் பொன்னான காலம்; அதிகமான ஊதியமும் ஊக்கத்தொகையும் கிடைக்கும்.