பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய, 2022-2023 ஆம் ஆண்டின் முதல் அரை ஆண்டிற்கான சொத்து வரியை, நாளைக்குள் செலுத்துவோருக்கு சொத்து வரியிலிருந்து 5 சதவிகிதம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மண்டல அலுவலகங்கள் வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், பேடிஎம், நம்ம சென்னை செயலி, கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் வாயிலாகவும், மாநகராட்சி வரி வசூலிப்பார்கள், உரிம ஆய்வாளர்கள் மூலமாக சொத்துவரியை செலுத்தலாம். சென்னை மாநகராட்சியை பொருத்தவரையில், சீராய்வு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், புதிய சொத்து வரி தொடர்பாக மன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பின்னர் அமல்படுத்தப்படும்.
அதன்படி, 2022-2023 ஆம் ஆண்டு முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை, ஏற்கனவே செலுத்தி வந்த கட்டணம் விகிதத்திலேயே செலுத்தலாம். நாளைக்குள் சொத்துவரி செலுத்தவில்லை என்றால், மொத்தமுள்ள சொத்து வரியில் 2 சதவிகித அபராதத் தொகை விதிக்கப்பட்டு சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM