KGF 2 Record Against Avengers End Game And Baahubali : தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புடன் தமிழ் படமான பீஸ்ட் (ஏப்ரல் 13), கன்னட பாடமாக கேஜிஎஃப் 2 (ஏப்ரல் 14) ஆகிய இரண்டு படங்களும் வெளியாகியுள்ளன. இந்த இரண்டு படங்களும் வெவ்வேறு மொழி திரைப்படங்கள் என்றாலும் கூட தமிழ் தெலுங் கன்னடம் மலையாளம் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகியுள்ளது.
இதில் ஒருநாள் முன்னதாக நேற்று வெளியாக விஜயின் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், முதல் நாள் வசூலில் பாக்ஸ் ஆபீஸை திணறடித்துள்ளது என்று சொல்லலாம். அதேசமயம், ஒருநாள் தாமதமாக இன்று வெளியாகியுள்ள கேஜிஎஃப் 2 திரைப்படம் பல சாதனைகளை முறியடித்து பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்து வருகிறது.
மேலும் டிக்கெட் முன்பதிவில் கேஜிஎஃப் திரைப்படம் ஆவஞ்சர்ஸ் என்ட் கேம், பாகுபலி உள்ளிட்ட படங்களின் சாதனையை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்துள்ளதாக பிரபல டிக்கெட் முன்பதிவு இணையதளமாக புக்மைஷோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புக்மைஷோ சினிமாஸ் சிஓஓ ஆஷிஷ் சக்சேனா கூறுகையில்,
“கே.ஜி.எஃப்: 2 (கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, தமிழ்) திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், 2.9 மில்லியன் டிக்கெட்டுகளை முன்கூட்டியே விற்று தீர்ந்தது. இன்று (ஏப்ரல் 14ஆம் தேதி) நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படுவதை முன்னிட்டு, புக்மைஷோ வரலாற்றில் ஒரு திரைப்படத்தின் டிக்கெட் விற்பனை. இன்று (ஏப்ரல் 14ம் தேதி) காலை 10:46 மணிக்கு வினாடிக்கு 84 டிக்கெட் விற்பனை என்ற உச்சத்தை எட்டியது.
இதன் மூலம், டிக்கெட் விற்பனை பிளாட்பார்மில் உள்ள அனைத்து சாதனைகளையும் கேஜிஎஃப் 2 முறியடித்துள்ளது. வினாடிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக டிக்கெட் விற்ற திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ள கேஜிஎஃப் 2 படத்துக்கான டிக்கெட் தொடக்க நாளிலேயே, புக்மைஷோவில் 4.5 மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்றுள்ளது, இந்த அதிரடி வார இறுதியில் விற்பனை 2 மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அபாரமான சாதனை அவஞ்சர்ஸ் என்ட்கேம் ( 2.8 மில்லியன்) மற்றும் பாகுபலி 2: தி கன்குலுஷன் (2.6 மில்லியன்) ஆகிய ஆகிய 2 படங்களையும் பின்னுக்கு தள்ளியுள்ளது. இந்திய சந்தையில்.இது பெஸ்போக் உள்ளடக்கத்திற்கான பிரம்மாண்டமான சாதனை. மேலும் முழுமையான சினிமா அனுபவத்துடன் பெரிய திரையில் திரைப்படங்களை ரசிக்க வேண்டும் என்ற ஆவலுக்கான சான்றாகும்.
நேற்று (ஏப்ரல் 13ஆம் தேதி) வெளியான பீஸ்ட் (தமிழ்) 1.7 மில்லியன் டிக்கெட்டுகளை விற்றுள்ள, நிலையில், தற்போது ஒவ்வொரு மணி நேரமும் வேகமாக அதிகரித்து வருகிறது. பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய இரு படங்களும் மாஸ் என்டர்டெய்னர்களாக இருப்பதால், இரண்டு படங்களும் இந்த வாரம் பாக்ஸ் ஆபிஸில் புயலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
“ “