புதுடெல்லி:
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டீசலில் இயங்கும் ரெயில்களில் பயணிகளுக்கு கட்டணத்தை கூடுதலாக வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஆனால் இந்த தகவல்களை ரெயில்வேத்துறை அமைச்சகம் மறுத்து உள்ளது. இது குறித்து ரெயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், டீசல் மூலம் இயக்கப்படும் ரெயில்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் மூலம் இயக்கப்படும் ரெயில்களுக்கு இந்திய ரெயில்வே கூடுதல் கட்டணம் விதிக்கப் போகிறதா என்று சில ஊடகங்கள் விசாரித்து வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த யூகங்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்…
பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி: ஆந்திரா, கேரளாவில் பஸ், டாக்சி கட்டணங்கள் உயர்வு