எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்ற முடிவு செய்துள்ளார். எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளைக் கைப்பற்றிய பின், நிர்வாகக் குழுவில் இடம் அளித்தும் மறுத்துவிட்டார். இது ட்விட்டர் முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
எலான் மஸ்க் மறுப்புக்குப் பின் பல காரணங்கள் உள்ளது எனப் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது ட்விட்டரை மொத்தமாகக் கைப்பற்ற முடிவு செய்து டக்கரான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
எலான் மஸ்க்
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்குவதற்கு முன் வந்துள்ளார். மேலும் ஒரு பங்கை 54.20 டாலருக்கு வாங்கு தயார் என்றும் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் ட்விட்டர் பங்குச்சந்தையிலிருந்து வெளியேற்றப்பட்டுத் தனியார் நிறுவனமாக மாற்றி, பல்வேறு மறுசீரமைப்பு பணிகளைச் செய்ய முடியும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
எலான் மஸ் கடிதம்
ட்விட்டர் தலைவர் பிரட் டெய்லருக்கு அனுப்பிய கடிதத்தில் எலான் மஸ்க், ” உலகளவில் சுதந்திரமான பேச்சுக்கான தளமாக ட்விட்டர் இருக்கும் என நம்பி தான், நான் முதலீடு செய்தேன், மேலும் பேச்சுச் சுதந்திரம் ஒரு சமூகத்தின் கட்டாயம் என்று தான் நம்புவதாக அந்தக் கடித்ததில் குறிப்பிட்டு இருந்தார்.
பேச்சுச் சுதந்திரம்
முதலில் ட்விட்டர் தனியார் நிறுவனமாக மாற்றப்பட வேண்டும், ட்விட்டர் தற்போது இருக்கும் கட்டமைப்பில் மக்களுக்குப் பேச்சுச் சுதந்திரத்தை முழுமையாக அளிக்க முடியாது. அதை அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்ற விருப்பம் தெரிவித்துள்ளதாக அறிவித்துள்ளார் எலான் மஸ்க்.
100 சதவீத பங்குகள்
100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்க தயார். மொத்த விற்பனைத் தொகையும் பணமாக அளிக்கத் தயார் என்றும் கூறியுள்ளார் எலான் மஸ்க். தற்போது குறிப்பிட்ட விலை தான் இறுதியான விலை, இதை ஏற்காவிடில் என்னுடைய பங்குதாரர் நிலையை மாற்ற யோசிக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளார் எலான் மஸ்க்.
54.20 டாலர்
தற்போது தற்போது குறிப்பிடப்பட்டு உள்ள 54.20 டாலர் என்பது தான் 9.2 சதவீத பங்குகளைக் கைப்பற்றிய விலையை விடவும் 54 சதவீதம் அதிகமாகவும், மேலும் முதலீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போது இருந்த விலையைக் காட்டிலும் 38 சதவீதம் அதிகமாகும்.
இதன் மூலம் எலான் மஸ்க் ட்விட்டரை சுமார் 43 பில்லியன் டாலருக்கு கைப்பற்ற உள்ளார்.
Elon Musk offer to buy 100 percent shares of Twitter at 54.20 Dollar
Elon Musk offer to buy 100 percent shares of Twitter at 54.20 Dollar ட்விட்டரை மொத்தமாக வாங்க தயாரான எலான் மஸ்க்.. 54.20 டாலர் கடைசி ஆஃபர்..!