தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் இன்றும் சற்று சரிவில் தான் காணப்படுகின்றது. எனினும் இது சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான் எனலாம்.
இந்திய சந்தையினை பொறுத்தவரையில் இன்றும் நாளையும் விடுமுறையாகும். எனினும் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்து இருந்தாலும், அது இந்திய முதலீட்டாளர்களுக்கு பெரிய பயனைக் கொடுக்கவில்லை என்றே கூறலாம்.
பெரும் ஏற்றத்திற்கு பிறகு ஆறுதல் தந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு.. இனியும் குறையுமா?
சற்றே சரிவில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது. கடந்த அமர்விலும் தங்கம் விலையானது காலை அமர்வில் சற்று குறைந்திருந்து, மாலை அமர்வில் மீண்டும் ஏற்றம் கண்டே முடிவடைந்தது. இன்றும் அப்படி இருக்கலாமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த இலக்கு
தங்கத்தின் விலையானது இன்று 1980 என்ற லெவல் வரையில் ஏற்றம் கண்டு தற்போது சற்று குறைந்து காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் அடுத்ததாக 2000 டாலர்களை தொடலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பணவீக்கம் Vs தங்கம்
அமெரிக்காவின் பணவீக்க விகிதமானது 40 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு உச்சம் தொட்டுள்ள நிலையில், இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும், தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம். ஆக தங்கம் விலையானது தற்போது சற்று குறைந்திருந்தாலும், அது மீண்டும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதம் என்னவாகும்?
அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை இந்த முறை கட்டாயம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் 50 அடிப்படை புள்ளிகளாவது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிகரித்து வரும் பணவீக்கமானது பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது பங்கு சந்தைகளிலும் இதன் தாக்கம் இருக்கலாம்.இதுவும் தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்கலாம்.
ரஷ்யா உக்ரைன் நெருக்கடி
தொடர்ந்து உக்ரைன் ரஷ்யா இடையே நிலவி வரும் பதற்றம், இன்னும் பணவீக்கத்தினை தூண்டும் விதமாகவே உள்ளது. இது சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியினை சரியத் தூண்டலாம். இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இது தங்கம் விலை நீண்டகால நோக்கில் அதிகரிக்க காரணமாக அமையலாம்.
டெக்னிக்கல் எப்படியுள்ளது?
டெனிக்கலாக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அனைத்து குறிகாட்டிகளும் வலுவாக ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. குறிப்பாக கடந்த அவுன்ஸூக்கு 1986 டாலர்கள் என்ற லெவலை உடைத்தால் இன்னும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு 6.90 டாலர்கள் குறைந்து, 1977.80 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலையையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்.
காமெக்ஸ் வெள்ளி விலை
வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 25.933 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. இதற்கிடையில் வெள்ளி விலை மீடியம் டெர்மில் குறைந்தாலும், மீண்டும் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
எம்சிஎக்ஸ் தங்கம் & வெள்ளி
இந்திய சந்தையினை பொறுத்தவரையில் இன்று விடுமுறையாகும். கடந்த அமர்வின் முடிவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டும் நல்ல ஏற்றம் கண்டு முடிவடைந்திருந்த நிலையில், அடுத்த வாரம் தொடரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாளையும் புனித வெள்ளி என்பதால் விடுமுறையாகும்.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், ஆபரணத் தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது சென்னையில் கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து, 5005 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்து, 40,040 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து, 5460 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 43,680 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 54,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை
இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 74.40 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 744 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 74,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
சர்வதேச தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் இரண்டுமே நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கம்,ரஷ்யா – உக்ரைன் பேச்சு வார்த்தை உள்ளிட்ட பல காரணிகள் விலையில் முக்கிய மாற்றத்தினை ஏற்படுத்தலாம். இதே ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.
gold price on April 14th, 2022: gold prices down today, but inflation concern may boost up price
gold price on April 14th, 2022: gold prices down today, but inflation concern may boost up price/தங்கம் விலை சரிவு தான்..ஆனாலும் பெரும் ஏமாற்றம் தான்.. ஏன்?