திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, அம்பேத்கரின் பிறந்தநாளுக்கு பேனர் வைக்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
விசிக இளைஞரணி பொறுப்பாளராக இருக்கும் சின்னதுரை என்ற அந்த இளைஞர், தனது கட்சியினர் 3 பேருடன் அம்பேத்கரின் பிறந்தநாளுக்கு பத்தர் கடை பகுதியில் சுமார் 20 அடி நீளமுள்ள பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, உயரழுத்த மின்கம்பியின் பேனர் உரசியதாக கூறப்படும் நிலையில், பேனரை பிடித்திருந்த 4 பேரும் மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டனர். இதில், சின்னதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்ற மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சின்னதுரையின் மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.