தூக்கம் என்பது ஒவ்வொரு நபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் ஒரு முக்கிய ஒரு அங்கமாகும்.
தூக்கம் முக்கியமானது, ஏனெனில் இது உடலை சரிசெய்யவும், பொருத்தமாகவும், மற்றொரு நாளுக்கு தயாராகவும் உதவுகிறது.
போதுமான ஓய்வு பெறுவது அதிக எடை அதிகரிப்பு, இதய நோய் மற்றும் நோய் காலம் அதிகரிப்பதைத் தடுக்கவும் உதவும்.
சிலருக்கு தூக்கத்தின் போது உடலுக்குள் நடக்கும் மாற்றங்கள் குறித்த சந்தேகம் காணப்படும். உண்மையில் தூங்கி பின் உடலில் என்ன மாற்றங்கள் நடக்கின்றது என்பதை தெரிந்து கொள்வோம்.
- உறங்கும்போது உடலின் வெப்பநிலை குறையும்.
- கண் அசைவுகள் நிற்கும்.
- தசைகள் தளர்வுற்று இதயத்தின் துடிப்பு சீராகும்.
- உடலின் பிற பகுதிகளுக்கு மூளையால் விதிக்கப்படும் கட்டளைகள் நின்றுவிடும்.
- அதன்பின் நரம்புகளின் பணிகள் ஒன்று சேரும். இவ்வாறு ஒன்று சேர்ந்ததை மூளைக்குச் செல்லும் நரம்பு உறுதி செய்ய மூளை ஆழ்ந்த ஓய்வுக்கு மாறும்.
- ஓய்வுக்கு மாறும் கடைசி நேரத்தில் மூளையானது முதுகெலும்புக்கு தனது ஆளுமை பொறுப்பை மாற்றிவிட்டு முழுமையான உறக்கத்துக்கு சென்றுவிடும்.
- அப்போது உடலிலுள்ள செல்கள் தம்மைப் புதுப்பித்துக் கொள்ளும்.
- அதன்பின் உறக்கத்தின் போது முதுகெலும்பு மட்டுமே உடலுக்கு உத்தரவு பிறப்பிக்கும்.
- ஏதேனும் அதிமுக்கியமான நிகழ்வு என வரும்போது முதுகெலும்பு மூளைக்கு தகவல் அனுப்பி அதை எழுப்பிவிட்டு, மூளை மீண்டும் விழித்துக் கொள்ளும்.