தென்ஆப்பிரிக்காவில் புது கொரோனா| Dinamalar

ஜோகன்னஸ்பர்க்:தென்ஆப்பிரிக்காவில் 2 புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மரபணு மாற்றம் அடைந்து வருகிறது. தற்போது பலநாடுகளில் ஒமைக்ரான் எக்ஸ்.இ. என்ற புதிய வகை வைரஸ் பரவுகிறது.தற்போது தென்ஆப்பிரிக்காவில் மரபணு மாற்றம் அடைந்த 2 புதிய ஒமைக்ரான் வைரஸ் வகை கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தொற்றுநோய் தடுப்பு மைய இயக்குனர் துலியோ டி ஒலிவேரா கூறுகையில் “புதிய வகை ஒமைக்ரானுக்கு பிஏ.4, பிஏ.5 என பெயரிடப்பட்டுள்ளது. போட்ஸ்வானா, பெல்ஜியம், ஜெர்மனி, டென்மார்க் மற்றும் இங்கிலாந்திலும் இந்த வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என ஆய்வு செய்கிறோம்” என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.