நியூ இயர் அதுவுமா ஏழுமலையான் பக்தர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்!

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பெட்ரோல், டீசல் விலை கடந்த சில மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்தது. சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் வெளியானதையடுத்து, எரிப்பொருட்களின் விலை தினந்தோறும் ஏற்பட்டு வருகிறது.

ஒரு மாதமாக எகிறிக் கொண்டிருக்கும் எரிப்பொருட்களின் விலை உயர்வின் விளைவாக தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய்க்கும், டீசல் விலை 101 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் நெருக்கடியை சந்தி்த்து வரும் நிலையில், டீசல் விலை அதிகரிப்பால் அரசு போக்குவரத்து கழகங்கள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன.

இந்த வருவாய் இழப்பை ஈடுசெய்ய பயணக் கட்டணத்தை உயர்த்த ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்து கழகம் அதிரடியாக முடிவெடுத்துள்ளது. இதன்படி, கிராமப்புறங்கள் மற்றும் மாநகர பகுதிகளில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில் குறைந்தபட்ச பயணக் கட்டணம் 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோன்று டீலக்ஸ் பஸ்சில் .5 ரூபாய், சூப்பர் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் வழக்கமான கட்டணத்தை விட 10 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆந்திராவில் 60 ரூபாயாக இருந்த டீசல் விலை தற்போது 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஆந்திர மாநில போக்குவரத்து கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சென்னை. வேலூரில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ஆந்திர மாநில அரசு பேருந்துகளிலும், திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் பஸ்களிலும் பயணக் கட்டணம் அதிரடியாக அதிகரித்துள்ளது.

ஆந்திர மாநில அரசை தொடர்ந்து, கேரளாவிலும் பஸ், டாக்சி பயண கட்டணத்தை உயர்த்த அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. அரசுப் பேருந்துகளில் மே 1 ஆம் தேதி முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளதா6க அந்த மாநில போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பஸ் கட்டண உயர்வுடன் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணமும் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.