பலாத்கார குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை| Dinamalar

கொப்பல் : சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி, கொப்பல் கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கொப்பல் நகரில் வசிப்பவர் லட்சுமண சந்திரப்ப தோனி, 40. இவர் 2020 செப்டம்பர் 11ல், சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமி பெற்றோர் புகாரின்படி, லட்சுமண் சந்திரப்ப தோனியை, மகளிர் போலீசார் கைது செய்தனர்.

கொப்பல் கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். விசாரணையில் இவரது குற்றம் நிறுபனமானதால், 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.அபராத தொகையில், 25 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, நிவாரணமாக வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.மற்றொரு வழக்குகொப்பாலின் கிராமம் ஒன்றில் வசிக்கும் யமனுரப்பா பகீர கவுடா என்பவர், 2018 செப்டம்பர் 24ல், சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். யமனுரப்பாவை கைது செய்த போலீசார், கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.விசாரணையில் அவரது குற்றம் உறுதியானதால், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி, குற்றவாளிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.