நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
இதன் முக்கிய அடையாளமாக, நடப்பு கல்வியாண்டில் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது. குறிப்பாக 10, 12 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று மீண்டும் தலைத்தூக்கி உள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனியார் பள்ளிகளுக்கு டெல்லி
மாநில அரசு
முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
தனியார் பள்ளிகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் பள்ளிகளை உடனடியாக மூட வேண்டும். மாணவர்கள் முகக்கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், சரீர இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
கொரோனா தொற்று உறுதியானால் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய வந்தால் உடனடியாக கல்வி இயக்குநரகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ன உள்ளிட்ட அறிவுறுத்தல்களை அளித்துள்ளது.