லண்டன் : பிரிட்டனில் எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றின் விலை உயர்வால், 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, பணவீக்கம் அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச்சில், பிரிட்டனில் பணவீக்கம், 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, பிப்ரவரியில், 6.2 சதவீதமாக இருந்தது. 1992ம் ஆண்டுக்குப் பின், பிரிட்டனில் இந்த அளவிற்கு பணவீக்கம் உயர்ந்துள்ளதற்கு, பெட்ரோல், டீசல், மின்சாரம், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வு தான் காரணம்.இத்துடன், வரி அதிகரிப்பாலும், மக்களின் வாழ்க்கைத் தரம், 1950களின் நிலைக்கு இறங்கி விட்டதாக, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில், கடந்த ஓராண்டில் இயற்கை எரிவாயு விலை, 28 சதவீதம் உயர்ந்துள்ளது. மின் கட்டணம், 19 சதவீதம் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை, 30 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், போக்குவரத்து கட்டணம் அதிகரித்துள்ளது.நடப்பு ஏப்ரலில், இயற்கை எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றின் விலை, 54 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், விலைவாசி மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Advertisement