விஜய்
படங்கள் என்றாலே சலசலப்பிற்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது. அந்த வகையில் நேற்று வெளியான விஜய்யின்
பீஸ்ட்
படத்திற்கும் சில சர்ச்சைகள் எழுந்துள்ளது.
நெல்சன்
இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.
எதிர்பார்த்தபடி படம் இல்லையென்றும், திரைக்கதை மற்றும் கதையில் நெல்சன் கோட்டைவிட்டுவிட்டார் எனவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
தளபதி 66 படத்திலிருந்து கசிந்த தகவல்…எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
இதை படத்தின் தயாரிப்பு நிறுவனமே உறுதிசெய்துள்ளது. படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்திருப்பதாகவும் பல வசூல் சாதனைகளை தகர்ந்தெறிந்து வருவதாகவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தில் விஜய் இந்தி மொழி பற்றி பேசிய வசனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் இடம்பெற்ற இந்தி மொழி பற்றி விஜய் பேசிய வசனம் தற்போது நாடு முழுவதும் பேசப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீஸ்ட்
இந்நிலையில் இதுபற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பொதுவாக படங்கள் என்றாலே பல விமர்சனங்கள் வரும். எனவே படத்தை படமாகத்தான் பார்க்கவேண்டும்.
அண்ணாமலை
பாஜ கவிற்கும் சினிமா துறையை சார்ந்தவர்களுக்கும் நல்ல பந்தம் உள்ளது. அதேபோல் நாட்டில் இந்தி திணிப்பு இல்லை என பிரதமர் மோடியே சொல்லிவிட்டார். எனவே இதை வைத்து யாரும் அரசியல் செய்யவேண்டாம் என
அண்ணாமலை
தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த நிலைப்பாட்டினால் பீஸ்ட் படத்திற்கு எந்த பிரச்சனையும் வராது என்பது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Beast Review கொடுத்த சந்திரசேகர்!