நடிகர் விஜயகாந்தின் மனைவியும்
தே.மு.தி.க
கட்சியின் பொருளாளருமான பிரேமலதா”
பீஸ்ட்
படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிளாக காட்டுவது தவறு” என கூறியுள்ளார்.
பீஸ்ட் திரைப்படத்தில், பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு என அனைத்து நடிகர்களும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நெல்சன்
திலீப்குமார் படத்தை இயக்கி உள்ளார்.ஒரு பக்கம் நெக்டிவ்வான விமர்சனமும், ஒரு பக்கம் தளபதியின் ரசிகர்கள் படத்தை கொண்டாடி இணையத்தை திணறடித்து வருகின்றனர்.
டாணாக்காரன் படத்தின் உண்மைகளை பகிர்ந்த பிரபல இயக்குனர் தமிழ்…!
பீஸ்ட் படத்தில், இந்திய ராணுவத்தின் உளவாளியாக நடித்திருக்கிறார்
விஜய்
, ஒரு அசம்பாவிதம் காரணமாக தனது வேலையை விட்டுவிட்டு தமிழ்நாட்டுக்கு வருகிறார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு ஷாப்பிங் மால், தீவிரவாதிகளால் ஹைஜாக் செய்யப்படுகிறது. அதற்குள் மாட்டிக்கொள்ளும் விஜய், பின்பு அங்கிருந்து மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே பீஸ்ட் படத்தின் கதை.
வீரராகவன்
என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். உமர் பாரூக் என்கிற வில்லன் கதாபாத்திரம் புதுமுக நடிகர் ஒருவர் நடித்துள்ளார். உமர் பாரூக் இந்தியாவில் என்ன குற்றம் செய்தார் என்கிற விபரங்கள் எதுவுமே படத்தில் இல்லை.இந்நிலையில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக மட்டுமே பீஸ்ட் திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. துப்பாக்கி திரைப்படத்தை தொடர்ந்து பீஸ்ட் திரைப்படமும் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளதாக முஸ்லீம் அமைப்புகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜயகாந்தின் மனைவியும் தே.மு.தி.க கட்சியின் பொருளாளருமான பிரேமலதாவிடம் பீஸ்ட் படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அப்போது அதற்கு பதிலளித்துள்ள அவர் “பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிளாக காட்டுவது தவறு” என கூறியுள்ளார்.
பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!