பீஸ்ட் வெற்றியா ? தோல்வியா ? ரோகினி தியேட்டர் ஓனர் அளித்த பிரத்யேக பேட்டி..!

பீஸ்ட் ரிலீஸ் பற்றி

ரொம்ப நாள் கழிச்சி தியேட்டர்ல ரசிகர்கள் கூட்டத்தை பார்க்கவே சந்தோஷமா இருக்கு. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இப்பொழுதுபழைய நிலைக்கு திரையரங்குகள் திரும்பியுள்ளது. ரசிகர்கள் படத்தை பார்க்க ஆர்வமாக வருவதை பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது.பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களை மீண்டும் திரையரங்கிற்கு அழைத்து வந்துள்ளது

பீஸ்ட் படத்திற்கு ரசிகர்களின் கொண்டாட்டம் பற்றி

பீஸ்ட் திரைப்படம் அதிகாலை நான்கு மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. இருந்தாலும் ரசிகர்கள் இரவு முழுவதும் திரையரங்கை திருவிழா நடக்கும் இடமாக மாற்றிவிட்டனர். மாஸ்டர் படத்திற்கு இருந்த அதே ஆரவாரமும் கொண்டாட்டமும் பீஸ்ட் படத்திற்கும் இருந்தது. மேலும் திரையரங்கிற்கு வெளியில் மட்டுமல்லாமல் படம் திரையிடப்படும்போதும் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் அமோகமாக இருந்தது.

பீஸ்ட் படத்தின் வரவேற்பு எப்படி இருக்கின்றது?

பீஸ்ட் படம் நேற்று வெளியானது. பொதுவாக படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு மட்டுமே ரசிகர்கள் அனைவரும் எழுந்து நடனமாடி படத்தை காண்பார்கள். ஆனால் பீஸ்ட் படத்திற்கு நேற்றும் சரி இன்றும் சரி திரையிடப்பட்ட அணைத்து காட்சிகளும் FDFS போன்றே இருக்கின்றது. குறிப்பாக அரபிக் குத்து பாடலுக்கு ரசிகர்கள் தரும் வரவேற்பு அமோகமாகவுள்ளது.

பீஸ்ட் படத்தின் வசூல் நிலவரம் என்ன ?

ரோகினி
திரையரங்க வரலாற்றிலேயே பீஸ்ட் படத்திற்கு தான் அதிக அளவிலான முன்பதிவு நடந்துள்ளது. படம் வெளியான நேற்று வசூல் அமோகமாக இருந்தது. குறிப்பாக சொல்லப்போனால் ரோகினி திரையரங்கில் முதல் நாளில் இந்த அளவிற்கு வசூல் வந்தது இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

பீஸ்ட் vs KGF2

நேற்று பீஸ்ட் திரைப்பம் தான் முழுவதும் திரையிடப்பட்டது. ஆனால் இன்று KGF இரண்டாம் பாகம் வெளியாகிவுள்ளதால் அப்படத்திற்கு சில SCREEN ஒதுக்கப்ட்டுள்ளது. எனவே KGF படத்திற்கான வரவேற்பை பொறுத்து SCREEN அதிகப்படுத்தப்படும். ஆனால் இப்போதைக்கு பீஸ்ட் படமே அதிக SCREENகளில் திரையிடப்பட்டு வருகின்றது

பீஸ்ட் விமர்சனம் பற்றி

எனக்கு பீஸ்ட் படம் மிகவும் பிடித்திருந்தது. இருப்பினும் ரசிகர்கள் பீஸ்ட் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். அதன் காரணமாக அவர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்திருக்க கூடும். இருப்பினும் நேற்று படத்தை பார்த்த ரசிகர்களே இன்றும் படத்தை பார்த்துவிட்டு நன்றாகத்தான் இருக்கின்றது என கூறிவருகின்றனர். எனவே படம் போக போக அனைத்து விதமான ரசிகர்களுக்கும் பிடித்தபடமாக இருக்கும்.

ரோகினி அஜித் கோட்டையா ?

ரோகினி திரையரங்கம் எப்போதும் ஒரு நடிகரின் கோட்டையாக இருந்ததில்லை. அனைத்து நடிகர்களின் படங்களுமே ரோஹிணியில் திருவிழாவாக கொண்டாடுவோம். எனவே ரோகினி திரையரங்கம் குறிப்பிட்ட நடிகரின் கோட்டை என்று சொல்லமுடியாது.

விஜய்யின் முந்தைய படங்களுக்கும் பீஸ்ட் படத்திற்கும் உண்டான வித்யாசங்கள் என்ன ?

பொதுவாக
விஜய்
படங்கள் என்றாலே பாடல்கள், நகைச்சுவை, வசனங்கள் என ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் பீஸ்ட் திரைப்படம் சற்று வித்யசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. எனவே போக போக பீஸ்ட் படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. சொல்லப்போனால் கொரோனா சூழலுக்கு பிறகு விஜய் படங்களில் பீஸ்ட் படத்திற்கு தான் அதிகமான டிக்கெட் டிமாண்ட் இருக்கின்றது.

நிறைய திரையரங்கில் பீஸ்ட் திரைப்படம் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வருகின்றதே ?

அதெல்லாம் வெறும் வதந்திதான். பீஸ்ட் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் குவைத் போன்ற சில நகரங்களில் பீஸ்ட் தடைசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே தவிர எந்த திரையரங்கிலும் பீஸ்ட் நிறுத்தப்படவில்லை. இது அனைத்தும் வதந்தியே.

நெல்சன் ரசிகர்களை ஏமாற்றிவிட்டாரா ?

பொதுவாக இதுபோன்ற விமர்சனங்கள் ட்விட்டரில் தான் அதிகம் வருகின்றது. பீஸ்ட் திரைப்படம் அனைத்து விதமான ரசிகர்களுக்கும் பிடித்த படமாக நெல்சன் கொடுத்துள்ளார். எனவே ட்விட்டர் விமர்சனங்களை நாம் உண்மை என்று நம்பிவிடக்கூடாது. அப்படி ட்விட்டர் விமர்சனங்கள் உண்மை என்றால் ரசிகர்கள் ஏன் படத்தை பார்க்க இந்த அளவு ஆர்வம் காட்டுகின்றார்கள். எனவே பீஸ்ட் தோல்வி படம் இல்லை வெற்றி படம் தான்.

விஜய் டிவி வீடியோ பற்றி

விஜய் டிவி எந்த நோக்கத்தில் அந்த வீடியோ போட்டார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் நகைச்சுவை உணர்வோடு போட்டிருந்தார்கள் என்றால் அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் குறிப்பாக படத்தை விமர்சிக்கும் வண்ணம் அந்த விடியோவை பதிவிட்டிருந்தார்கள் என்றால் அது தவறு தான்.

நெல்சன் – ரஜினி படம் பற்றி

பீஸ்ட் படம் எப்படி ஜாலியான ஆக்ஷன் திரில்லர் படமாக இருந்ததோ அதேபோல் ரஜினி மற்றும் நெல்சன் இணையும் படமும் இருக்குமென்று எதிர்பார்க்கின்றோம். அப்படத்திற்கு இதுபோன்ற கொண்டாட்டங்கள் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.