பெங்களூரு : பெங்களூரில் நேற்று மாலை, கன மழை பெய்ததில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆனால் வெப்பத்தால் காய்ந்திருந்த நகரை குளிர்வித்தது.பெங்களூரில் இரண்டு மாதமாக, வெப்பத்தின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்தது. வெயில் தீயாக கொளுத்தியதால், வீட்டை விட்டு வெளியே வரவே தயங்கினர்.நகரில் நேற்று மதியத்திலிருந்து, மேகமூட்டமான வானிலை இருந்தது.
மாலை 6:00 மணியளவில் துவங்கிய மழை, நீண்ட நேரம் கொட்டி தீர்த்தது. ஜெயநகர், சவுத் என்ட் சதுக்கம், ஜெ.பி.நகர், சாந்திநகர்.ஆடுகோடி, ஜெ.சி.நகர், பனசங்கரி, வில்சன் கார்டன், டவுன் ஹால், மைசூரு சாலை, சிவாஜிநகர், கத்ரிகுப்பா, பத்மநாபநகர், மெஜஸ்டிக் உட்பட, பல பகுதிகளில் பெருமழை பெய்தது.ஆனேக்கல், எலக்ட்ரானிக்சிட்டி, ஹெப்பகோடி, சந்தாபுரா என, பல இடங்களில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.சாலைகள் ஏரிகளாக மாறின. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை பணி முடிந்து, வாகனங்களில் வீடு திரும்புவோர் தொந்தரவுக்கு ஆளாகினர்.வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்ட பெங்களூரு, நேற்று பெய்த மழையால் குளிர்ந்தது.
Advertisement