பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க முடியாது.. நிதியமைச்சகம் அதிரடி பதில்..!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் உயர்வால் பணவீக்கம் அதிகரித்து அனைத்து உணவு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்த காரணத்தால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்களின் சுமையைப் போக்கக் கடந்த ஒரு வருடத்தில் மத்திய மாநில அரசுகள் எரிபொருள் மீதான வரியைக் குறைத்த நிலையிலும், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரிபொருள் மீதான வரியை குறைக்கப் பல தரப்புகள் கோரிக்கை வைத்துள்ள வரும் நிலையில், மத்திய அரசின் எண்ணெய் வள அமைச்சகமும் கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு நிதியமைச்சகம் அதிரடியான பதிலைத் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.8.40 உயர்வு.. 12வது முறை விலை உயர்வு..!

எரிபொருள் விலை

எரிபொருள் விலை

இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நுகர்வோர் சந்தை, உற்பத்தி சந்தை, போக்குவரத்துத் துறை என நாட்டின் வேகமான வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கும் அனைத்தும் வளர்ச்சிப் பாதையில் தேக்கம் அடைந்துள்ளது. இது நாட்டின் வளர்ச்சிக்கு மட்டும் அல்லாமல் வேலைவாய்ப்பு சந்தையைப் பாதிக்கப்பட்டு உள்ளது.

எண்ணெய் வரித்துறை அமைச்சகம்

எண்ணெய் வரித்துறை அமைச்சகம்

இந்நிலையில் மக்கள் தினமும் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய எண்ணெய் வளத்துறை அமைச்சகம், நிதியமைச்சகத்திடம் பரிந்துரை செய்துள்ளதாகவும், இதற்கு நிதியமைச்சகம் மறுப்புத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆலோசனைக் கூட்டம்
 

ஆலோசனைக் கூட்டம்

சர்வதேச எண்ணெய் விலை உயர்வைக் கையாள்வதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க, மத்திய நிதி அமைச்சகம், மத்திய எண்ணெய் வள அமைச்சகங்களின் அதிகாரிகளும், அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் சமீபத்தில் ஆலோசனை செய்தனர்.

மாற்று வழி

மாற்று வழி

இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய நிதியமைச்சகம் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க இப்போதைக்கு முடியாது என்றும், எண்ணெய் வள அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்க மறுத்துள்ளது. இதற்கு மாறாக எண்ணெய் நிறுவனத்தின் வாயிலாக விலை குறைப்பைக் கொண்டு வர முயற்சி செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

விலை உயர்வு

விலை உயர்வு

மார்ச் 22 முதல் ஏப்ரல் 6 வரை லிட்டருக்கு சுமார் ₹10 உயர்ந்த பின் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த பின்பு சில்லறை விற்பனை விலை கடந்த ஒரு வாரத்திற்கு மாறாமல் உள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் மத்தியில் பெட்ரோல் லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் 18 ரூபாய் அளவிலான விலை இடைவெளியைக் கொண்டுள்ளது என இத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு

மத்திய அரசு

மத்திய அரசுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரிபொருள் விற்பனையில் கிடைக்கும் வரி வருமானம் மிகப்பெரியது என்பதால், இதன் விலை எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து வரியை குறைக்காமல் வைத்துள்ளது. ஏற்கனவே அதிகப்படியான நிதி நெருக்கடியில் மத்திய அரசு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

finance ministry cant cut taxes on petrol, diesel as of now; Turndown oil ministry proposal

finance ministry cant cut taxes on petrol, diesel as of now; Turndown oil ministry proposal பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க முடியாது.. நிதியமைச்சகம் அதிரடி பதில்..!

Story first published: Thursday, April 14, 2022, 15:25 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.