புதுடில்லி-”சுதந்திரத்துக்குப் பின் அமைந்த அரசுகள் அனைத்தும், நாட்டை உயரத்திற்கு கொண்டு செல்வதில் பெரும் பங்களித்துள்ளன. ஒன்று அல்லது இரண்டு விதிவிலக்குகளைத் தவிர்த்து, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பெருமைமிக்க பாரம்பரியத்தை நாம் கொண்டுள்ளோம்,” என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.
நம் முன்னாள் பிரதமர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய அருங்காட்சியகத்தை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து, டில்லி தீன் மூர்த்தி எஸ்டேட் வளாகத்தில், 271 கோடி ரூபாய் செலவில், 10 ஆயிரம் ச.மீட்டர் பரப்பளவில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகாரம்இதில், 14 முன்னாள் பிரதமர்களின் அபூர்வ படங்கள், குறிப்புகள், அவர்களின் சாதனைகள் உட்பட அனைத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த, அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்; அருங்காட்சியகத்தை பார்வையிட, பணம் கொடுத்து முதல் டிக்கெட்டை வாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:நாம் வலுவான ஜனநாயக பாரம்பரியத்தை கொண்டுள்ளோம். ஒவ்வொரு சகாப்தத்திலும், ஒவ்வொரு தலைமுறை யிலும், ஜனநாயகத்தை மிகவும் நவீனமானதாகவும், அதிகாரம் பெற்றதாகவும் மாற்றும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒன்று அல்லது இரண்டு விதிவிலக்குகளைத் தவிர்த்து, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பெருமைமிக்க பாரம்பரியத்தை நாம் கொண்டுள்ளோம். ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியம், நம் அனைவருக்கும் உள்ளது.நாட்டின் ஒவ்வொரு பிரதமரும், அரசியலமைப்பு ஜனநாயகத்தின் இலக்குகளை நிறைவேற்றுவதில், மகத்தான பங்களிப்பை அளித்துள்ளனர்.அவர்களை நினைவுகூர்வது, சுதந்திர இந்தியாவின் பயணத்தை அறிந்து கொள்வதற்கு சமமாகும். நாட்டின் சுதந்திரத்திற்குப் பின் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு அரசும், நாட்டை உயரத்திற்கு கொண்டு செல்வதில் மகத்தான பங்களித்துள்ளன.நம் பிரதமர்களில் பெரும்பாலானவர்கள், எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பது, நமக்கு பெருமை அளிக்கும் விஷயம்.
நம்பிக்கை
தொலைதுார கிராமப்புறங்களில் இருந்தும், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்தும், விவசாய குடும்பத்தில் இருந்தும் பிரதமர் பதவிக்கு வருவது, இந்திய ஜனநாயகத்தின் சிறந்த மரபுகள் மீதான நம் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.மகிழ்ச்சிநாடு சுதந்திரம் அடைந்த 75ம் ஆண்டை நாம் கொண்டாடி வரும் நிலையில், இந்த அருங்காட்சியகம் மிகப்பெரிய உத்வேகமாக உள்ளது. இங்கு வரும் மக்கள், நம் முன்னாள் பிரதமர்கள் நாட்டுக்கு அளித்த பங்களிப்பையும், அவர்களின் பின்னணி மற்றும் போராட்டம் குறித்தும் அறிந்து கொள்ள முடியும்.
அருங்காட்சியகத்தை, நம் அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பிறந்த நாளில் திறப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.இவ்வாறு பிரதமர் பேசினார்.’அம்பேத்கரின் கொள்கைகள்உத்வேகம் அளிக்கின்றன’நம் அரசியல் சட்டத்தை உருவாக்கிய, டாக்டர் அம்பேத்கரின் ௧௩1வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, பிரதமர் மோடி கூறியதாவது:ஏழை தலித் குடும்பத்தில் பிறந்த அம்பேத்கர், வாழ்க்கையில் பெரும் போராட்டங்களையும், சவால்களையும் எதிர்கொண்டு, சிறந்த சட்ட மேதையாகவும், சிறந்த பொருளாதார நிபுணராகவும் திகழ்ந்தார். தலித்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடினார். அவரது கொள்கைகள் தான், ஏழைகள், தலித்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை செயல்படுத்துவதில், அரசுக்கு உத்வேகம் அளிக்கின்றன. இவ்வாறு பிரதமர் கூறினார்.
தமிழில் புத்தாண்டு வாழ்த்துஉலகம் முழுதும் தமிழ்ப் புத்தாண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடி தமிழில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியதாவது:அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்; குறிப்பாக என் தமிழ் சகோதர – சகோதரிகளுக்கு, வரும் புத்தாண்டு வெற்றிகளையும், சந்தோஷங்களையும் தரட்டும்; அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும். மக்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்வுடனும் இருக்க வாழ்த்துகள்.இவ்வாறு பிரதமர் கூறினார். சோனியா, ராகுல் புறக்கணிப்பு டில்லியில் நேற்று திறக்கப்பட்ட பிரதமர்களின் அருங்காட்சியக விழாவில் பங்கேற்க, முன்னாள் பிரதமர்கள் ௧௪ பேரின் குடும்பத்துக்கும், மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில், முன்னாள் பிரதமர்களான நேரு, இந்திரா, ராஜிவ் ஆகியோரின் குடும்பத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் சோனியா, பொதுச் செயலர் பிரியங்கா, எம்.பி., ராகுல் உட்பட காங்கிரஸ் கட்சியினர் யாரும் பங்கேற்கவில்லை. காங்., மன்மோகன் சிங்கை தவிர, மற்ற முன்னாள் பிரதமர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், மன்மோகன் சிங் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது
.முன்னாள் பிரதமர் லால் பகதுார் சாஸ்திரிக்கு, அவரது மாமனார் வரதட்சணையாக கொடுத்த ராட்டையை அருங்காட்சியகத்தில் வைக்க, லால் பகதுாரின் மகன் சுனில் சாஸ்திரி வழங்கிஉள்ளார்.இதேபோல், மற்ற முன்னாள் பிரதமர்கள் பயன்படுத்திய பொருட்களை, அவர்களது குடும்பத்தினர் அருங்காட்சியகத்துக்கு வழங்கியுள்ளனர்.