இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்த நாள் விருந்து சர்ச்சை சம்பவத்தில் நிபந்தனையில்லா மன்னிப்பு கோருவதாக தெரிவித்த நிதி அமைச்சர் ரிஷி சுனக், போலீசார் விதித்த அபராதத்தை செலுத்தியதாக கூறினார்.
கொரோனா காரணமாக பொது வெளியில் கூட விதிக்கப்பட்ட தடையை மீறி கடந்த 2020ஆம் ஆண்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் பிறந்த நாள் விருந்தில் கலந்து கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சம்பவத்திற்கு எதிர்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தன. இந்நிலையில் பிறந்த நாள் விருந்து குறித்து விசாரணை நடத்திய லண்டன் போலீசார் போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவெளி நிதி அமைச்சர் ரிஷி சுனக் உள்ளிட்டோருக்கு அபராதம் விதித்தனர்.
ஏற்கனவே போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரிய நிலையில் தற்போது ரிஷி சுனக் மன்னிப்பு கோரி, அபராதத்தை செலுத்தினார்.