வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நேப்பிடா: மியான்மர் கிராமங்கள் பலவற்றை அந்நாட்டு ராணுவம் தீவைத்து கொளுத்தியதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. மியான்மர் நாட்டு ஜனநாயக தலைவர் ஆங் சான் சூ காய்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
ராணுவ ஆட்சியை எதிர்த்த ஜனநாயக ஆதரவாளர்கள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மியான்மர் குடிமக்கள் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து உலக நாடுகள் பல இந்த வன்முறை செயலுக்கு கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடாத அப்பாவி குடிமக்கள் பலரையும் மியான்மர் ராணுவம் சுட்டு கொல்வதாக தகவல் வெளியாகியது. இதனை நிரூபிக்கும் வகையில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
மியான்மர் நாட்டில் உள்ள சிறிய கிராமம் பின். இங்கு மியான்மர் ராணுவத்தினர் குடிசைகளுக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதேபோல நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் ராணுவத்தால் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளன.
பின் கிராமத்தில் 5,500 குடிமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் இந்த தீ வைப்பு சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஓராண்டில் இதேபோல அப்பாவி கிராம மக்கள் பலர் ராணுவத்தின் இந்த தீ மூட்டலால் கொல்லப்பட்டு உள்ளதற்கு உலக அளவில் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Advertisement