முகேஷ் அம்பானி புதிய திட்டம்.. பிரிட்டன் பார்மசி நிறுவனத்தைக் கைப்பற்ற முடிவு..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பூட்ஸ் (Boots) என்னும் பார்மசி மற்றும் அழகுசாதன பொருட்கள் விற்பனை நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டத்தில் இறங்கியுள்ளார்.

சீரிஸ் 3 : டீமேட் என்றால் என்ன.. இதனை எப்படி தொடங்குவது?

இந்தப் பூட்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றுவதன் மூலம் பிரிட்டன் உட்பட 6 நாடுகளின் வர்த்தகச் சந்தைக்குள் நுழைய முதல் படியாக இருக்கும். டீல் மதிப்பு என்ன தெரியுமா..?

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இந்தியாவின் 2வது பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருவது அனைவருக்கும் தெரியும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்திற்குப் போட்டியாகத் தற்போது டாடா, அதானி குழுமங்கள் களத்தில் உள்ளது, இதனால் முகேஷ் அம்பானி தனது கேம்-ஐ மாற்றியுள்ளார்.

 வர்த்தக விரிவாக்கம்

வர்த்தக விரிவாக்கம்

கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையில் மட்டுமே இயங்கி வந்த நிலையில் தற்போது டெலிகாம், ரீடைல் பிரிவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வகும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரீடைல் மருந்து விற்பனையில் இறங்க முடிவு செய்துள்ளது.

பிரிட்டன்
 

பிரிட்டன்

இதற்காகப் பிரிட்டன் நாட்டின் முன்னணி நிறுவனத்தைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளார் முகேஷ் அம்பானி. கொரோனா காலத்தில் பிரிட்டன் நாட்டில் சொந்த வீட்டை வாங்கிய முகேஷ் தற்போது வர்த்தகத்தையும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது.

பூட்ஸ் நிறுவனம்

பூட்ஸ் நிறுவனம்

அமெரிக்க நிறுவனமான வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பூட்ஸ் நிறுவனம் பிரிட்டன் நாட்டில் மட்டும் சுமார் 2200 மருந்து மற்றும் NO7 பிராண்டின் கீழ் அழகுசாதன பொருட்கள் கடைகளை வைத்துள்ளது. இந்த நிறுவனம் தற்போது பிரிட்டன் உடன் அயர்லாந்து, இத்தாலி, நார்வே, நெதர்லாந்து, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது.

வால்கிரீன்ஸ்

வால்கிரீன்ஸ்

வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பூட்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்கான பேச்சுவார்த்தையை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் துவங்கியுள்ள நிலையில், பூட்ஸ் நிறுவனம் சுமார் 7 பில்லியன் பவுண்ட்ஸ் அதாவது 9.1 பில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டுள்ளது.

போட்டி

போட்டி

வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் பூட்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்ற தற்போது அப்போலோ குளோபல் மேனேஜ்மென்ட், TDR கேபிட்டல், பெயின் கேப்பிடல், சிவிசி கேப்பிடல் பார்ட்னர்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருகை போட்டியை அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Mukesh Ambani planning to bid Walgreens owned Boots Pharmacy chain in UK

Mukesh Ambani planning to bid Walgreens owned Boots Pharmacy chain in UK முகேஷ் அம்பானி புதிய திட்டம்.. பிரிட்டன் பார்மசி நிறுவனத்தைக் கைப்பற்ற முடிவு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.