மோகன்லாலிடம் கற்றுக்கொண்ட பாடம் : வித்யாபாலன்

ஸ்ரீதேவிக்கு பிறகு தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை வித்யாபாலன். இத்தனைக்கும் தென்னிந்திய மொழிகளில் எந்தப்படத்திலும் நடிக்காமலேயே இந்த இடத்தை பிடித்தவர் வித்யாபாலன். 2003ல் தமிழில் ஸ்ரீகாந்த், த்ரிஷா நடிப்பில் வெளியான ‛மனசெல்லாம்' என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் ஒப்பந்தமானார். ஆனால் படப்பிடிப்பில் ஒரு சின்ன விபத்து ஏற்பட, அந்த சென்டிமென்ட் காரணமாக அவரை அந்தப்படத்தில் இருந்து நீக்கி விட்டார்கள்

அதேபோல 2000த்தில் 'சக்ரம்' என்கிற மலையாள படத்தில் மோகன்லாலுடன் இணைந்த நடித்தார். அந்தப்படமும் சில காரணங்களால் சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது. இந்தப்படம் குறித்தும் அதில் சில நாட்கள் மோகன்லாலுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்தும் தற்போது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் வித்யாபாலன்.

“சக்ரம் படத்தின் படப்பிடிப்பு மொத்தமே ஆறேழு நாட்கள் தான் நடந்தது. அதற்கு முன்னதாக மோகன்லாலின் படங்களை பார்த்து வியந்துள்ள நான் அந்தப்படப்பிடிப்பில் நேரில் மோகன்லாலை பார்த்ததும் இன்னும் ஆச்சர்யப்பட்டேன்.. குறிப்பாக படப்பிடிப்பில் ஷாட் இடைவேளையின்போது புத்தகம் படிப்பது, சேரில் அமர்ந்து ஓய்வெடுப்பது என இல்லாமல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ஒவ்வொருவருடனும் இணைந்து அவர்களுக்கு உதவியாக டேப் பிடிப்பது, லைட்டிங் அமைப்பது என ஏதாவது சிறுசிறு வேலைகளை செய்து வருவார் மோகன்லால். மிகப்பெரிய நடிகர்கள் ஒருசிலரிடம் மட்டுமே இருக்கும் அரிதான குணம் அது. அந்தப்படத்தில் அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் ஆது” என கூறியுள்ளார் வித்யாபாலன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.