பீஸ்ட் பட ப்ரமோஷனுக்காக நடிகர் விஜய் கொடுத்த பேட்டியில், இயக்குநர் நெல்சன் விஜய் எவ்வளவு எளிமையானவர் என்று குறிப்பிட்டு சென்னதை தொடர்ந்து ரஜினிகாந்த் எளிமை தொடர்பாக பேசிய பழைய வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியானது. இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகர் விஜய் 10 ஆண்டுகளுக்கு பிறகு சன்டிவிக்கு பேட்டி கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் நெல்சன் தொகுப்பாளராக பங்கேற்று விஜயிடம் கேள்வி கேட்டார்.
இந்த பேட்டி தொடர்பாக டிவியின் ப்ரமோ வெளியான போது நெட்டிசன்கள் பலரும், ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் ஒரு நடிகரால் எப்படி தன்னை எளிமையாக அடையாளம் காட்ட முடியும் என்று கேள்வி எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார், விஜய்யை பேட்டி எடுக்கும்போது, தன்தையும் தனது நண்பர்களையும் விஜய் இரவு விருந்துக்கு அழைத்தபோது, ஒரு ஆடம்பரமான விருந்தை எதிர்பார்த்து வந்தேன். ஆனால், அப்போது விஜய் ரூ.100 மதிப்புள்ள பிரியாணியை மட்டுமே கொடுத்ததாக நெல்சன் கூறினார்.
மேலும் ஷாப்பிங்கின் போது கூட விஜய்யின் தேர்வு செய்யும் ஆடை மற்றும் பொருட்கள் மிகவும் எளிமையானவை என்றும் படத் தயாரிப்பாளர் கூறினார். இதற்கு பதில் அளித்த நடிகர் விஜய் நான் எப்போதும் சாதாரணமாகவும் எளிமையாகவும் இருக்க விரும்புவதாகக் கூறினார். விஜயின் இந்த பதில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவியது.
ஆனால் தற்போது விஜய்யின் இந்த பேட்டிக்கு எதிர்ப்பாக 2.0 படத்தின் வெளியீட்டின் போது ரஜினிகாந்த் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் தான் ஆற்றிய பணிகளுக்கு பெயர் பெற்ற ரஜினிகாந்திடம், புகழ், பணம் உட்பட அனைத்தும் மாயை என்பதை புரிந்து கொண்டு எளிமையின் பாதையை தேர்ந்தெடுக்கிறீர்களா என்று தொகுப்பாளினி அர்ச்சனா கேட்டதற்கு, “எளிமை” என்ற கருத்து எனக்கு புரியவில்லை என ரஜினிகாந்த் கேட்டார்.
மேலும் “எளிமை பற்றி எனக்குத் தெரியாது. நான் பயன்படுத்தும் கார் பிம்டபிள்யூ. நான் வசிக்கும் வீடு போயஸ் கார்டனில் உள்ளது. நான் சாப்பிட போகும் ஹோட்டல்கள் 5 ஸ்டார் மற்றும் 7 ஸ்டார். இது எப்படி எளிமை என்று புரியவில்லை” என்று கூறிய ரஜினிகாந்த் “எளிமை என்பது நாம் எப்படி உடுத்துகிறோம் என்பதில் மட்டும் தங்கியிருக்கிறதா? ” என்று மேலும் கேள்வி எழுப்பினார்.
Real simplicity, guts to admit who you really are. https://t.co/z0IXyLrNw2
— BRUNO (@KaneshBruno) April 12, 2022
Otrathuu Rolls-Royce car vera but 100ruba biriyani saaptaa simplicity 😉
— 👹👹Maduai Padithurai Pandi😹😹 (@Shanmu69239062) April 12, 2022
இது தான் தலைவா அந்த simplicity 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 https://t.co/ATGAoXqYLe
— என்றும் 🤘 ரஜினி 🤘 (@rkmmdu2021) April 12, 2022
Nethu Vijay sonna simplicity Kum reality ulla difference https://t.co/KUjctXM3L9
— வைதீ 💙 (@VaideeshwaranS) April 12, 2022
Their : rolls royce ottikitu, 100ruba biriyani sapthukitu simple la irukaru
Thalaivar : Dei kanna hold this video https://t.co/7VQu1yAzCt
— 𝗥𝗔𝗝𝗘𝗦𝗛𝗪𝗘𝗥 (@rajeshwer_19) April 12, 2022
ரஜினிகாந்தின் இந்த வெளிப்படைத்தன்மையை பல ரசிகர்கள் பாராட்டி வரும் நிலையில், அவர் பேசிய இந்த குறிப்பிட்ட கிளிப் வீடியோவை மட்டும் தனியாக எடுத்து விஜய்யின் சமீபத்திய பேட்டியோடும் ஒப்பிட்டு சமூக ஊடக தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
“ “