உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 50 நாட்களை எட்டியுள்ள நிலையில், 40-வது மிக உயர் அதிகாரி ஒருவரை விளாடிமிர் புடினின் செம்படைகள் இழந்துள்ளது.
குறித்த தகவலை உக்ரேனிய இராணுவ அதிகாரிகளே வெளியிட்டுள்ளனர். கடந்த 50 நாட்களில் மட்டும் சுமார் 12,000 வீரர்களை ரஷ்யா இழந்துள்ளது.
மட்டுமின்றி, விளாடிமிர் புடினுக்கு மிக நெருக்கமான 5 தளபதிகளும் உக்ரைன் போரில் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே ரஷ்ய துருப்புகள், தங்களின் மிக முக்கியமான அதிகாரிகளில் ஒருவரான லெப்டினன்ட் கர்னல் டெனிஸ் மெசுவேவ் போரில் இழந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. மட்டுமின்றி, உக்ரேனிய ஏவுகணை தாக்குதலில் ரஷ்ய போர் கப்பல் ஒன்று சிக்கிக்கொண்டு கடலில் மூழ்கியதும், அந்த கப்பலில் இருந்த 300 வீரர்களும் மரணமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லெப்டினன்ட் கர்னல் டெனிஸ் மெசுவேவ் கொல்லப்பட்டதை உக்ரைன் வெளியிட்ட பின்னர் ரஷ்யாவும் உறுதி செய்துள்ளது.
ஆனால், மேலதிக தகவல் ஏதும் லெப்டினன்ட் கர்னல் டெனிஸ் மெசுவேவ் கொல்லப்பட்டது தொடர்பில் வெளியாகவில்லை.
இந்த நிலையில் ரஷ்யாவின் முக்கிய கவிஞர்களில் ஒருவரான Andrey Kovalev, சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில்,
ரஷ்யாவின் முக உயரிய விருதளித்து டெனிஸ் மெசுவேவை கெளரவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
ரஷ்யா இதுவரை 7 தளபதிகளையும் 33 மிக உயரிய பதவியில் இருக்கும் இராணுவ தலைவர்களையும் இழந்துள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் ரஷ்யா கடும் பின்னடைவை எதிர்கொண்டு வந்தாலும், அனைத்தும் திட்டமிட்டபடியே முன்னெடுக்கப்படுவதாக விளாடிமிர் புடின் நிர்வாகம் கூறி வருகிறது.
பிப்ரவரி 24 ல் போர் தொடங்கியதிலிருந்து, மொத்த ரஷ்ய துருப்புகளின் இறப்பு எண்ணிக்கை 20,000 என கூறப்படுகிறது.
ஆனால் புடின் நிர்வாகம் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கையை வெளியிடுவதை ஆரம்பத்திலேயே நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.