ரஷ்ய அரசுக்கு சொந்தமான 14 நிறுவனங்களுக்கு தடை விதிப்பதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் தொடரும் சூழலில், பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இந்நிலையில், தங்கள் நாட்டிலுள்ள ரஷ்ய அரசுக்கு சொந்தமான பாதுகாப்புத்துறை சார்ந்த போக்குவரத்து நிறுவனம், எரிபொருள், கப்பல் கட்டும் நிறுவனம் உள்ளிட்ட பதிநான்கு நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதிப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பேய்ன் அறிவித்துள்ளார்.
இதில், ரஷ்யாவின் மின் சாதன பொருட்களுக்காக பாகங்களை அதிகளவில் தயாரிக்கும் முக்கிய நிறுவனமான ரஸ்எலக்டிரானிக்ஸ் நிறுவனமும் அடங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா மீது பொருளாதார ரீதியில் அழுத்தத்தை அதிகரித்து, போருக்கு புடினின் தொடர்ந்து நிதியளிக்கும் திறனைக் குறைத்து வருவதாக ஆஸ்திரேலிய அமைச்சர் கூறியுள்ளார்.