கடுமையான மாரடைப்பு காரணமாக சிறப்பு சிகிச்சையில் இருந்து வருவதாக கூறப்பட்ட ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தொடர்பில் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார் முதன்மை தொழிலதிபர் ஒருவர்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் விரோதிகள் பட்டியலில் இடபெற்றவர்களில் ஒருவர் 62 வயதான Leonid Nevzlin.
நாட்டைவிட்டு வெளியேறியுள்ள இவர், தற்போது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரின் உடல் நிலை தொடர்பில் சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் Sergei Shoigu-ன் பதவிக்கு வேட்டு வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், இனி உயிர் பிழைத்து மருத்துவமனையில் இருந்து திரும்பினால் ஊனமுற்ற நிலையிலேயே அவர் காணப்படுவார் என Leonid Nevzlin குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுமார் 7.6 பில்லியன் பவுண்டுகள் ஊழல் வழக்கில் 20 பாதுகாப்பு அமைச்சக தளபதிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதும்,
இதனால் 150 ஃபெடரல் பாதுகாப்பு சேவை (FSB) அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதிக்கு எதிராக சதி செய்வதாக எழுந்த சந்தேகத்தின் பேரிலேயே பாதுகாப்பு அமைச்சர் Sergei Shoigu தண்டிக்கப்படுவதாகவும்,
திடீரென்று ஒருநாள் மாயமானவர், பின்னர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியானதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது இயற்கையாக அல்ல எனவும், அதற்கு பின்னணி இருக்கலாம் எனவும் Leonid Nevzlin குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் பலத்த அடி வாங்கிய நிலையில், பாதுகாப்பு அமைச்சரை புடின் ஓரம்கட்டியதாகவும் கூறப்படுகிறது.