ரஷ்ய வீரர்களை சித்திரவதை செய்ததாக உக்ரைன் மீது ரஷ்யா வழக்குகளைத் தொடர்ந்துள்ளது.
உக்ரைனில் ரஷ்யா தனது படையெடுப்பை தொடங்கியபோது, உக்ரேனியப் படைவீரர்கள் ரஷ்ய வீரர்களை சித்திரவதை செய்ததாகக் கூறப்படும் குற்றவியல் வழக்குகளைத் திறப்பதாக ரஷ்யாவின் புலனாய்வுக் குழு அறிவித்துள்ளது.
முக்கிய பெரிய குற்றங்களை விசாரிக்கும் இந்தக் குழு, சில ரஷ்ய வீரர்கள் உக்ரேனியப் படைகளால் ஜாபோரிஜியா (Zaporizhzhia) மற்றும் மைகோலெய்வ் (Mykolaiv) பகுதிகளில் கைது செய்யப்பட்டு உக்ரைனின் பாதுகாப்பு சேவையால் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறியது.
உண்மையான நிலைமைகள் குறித்து தவறான விளக்கங்களை வழங்குவதற்காக ரஷ்யர்கள் உடல்ரீதியான வன்முறை மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, போர்க் கைதிகளை நடத்துவது தொடர்பான அனைத்து தகவல்களையும் சரிபார்ப்பதாகவும், ஏதேனும் மீறல்கள் இருந்தால் விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் உக்ரைன் கூறியுள்ளது.
இதனிடையே, ரஷ்யாவின் புலனாய்வுக் குழுவின் தலைவரான அலெக்சாண்டர் பாஸ்ட்ரிகின் (Alexander Bastrykin), உக்ரேனியப் படைகள் லூஹான்ஸ்க் நகரத்தில் இருந்து கார்கிவ் பகுதி வழியாக வெளியேறும் போது பொதுமக்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விசாரணைக்கு உத்தரவிட்டார்.