#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்- மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷியா ?

14.4.2022


13.50: உக்ரைனில் ரஷிய படைகளின் தாக்குதலில் மரியுபோல் நகரம் பெறும் சேதத்தை சந்தித்துள்ளது. அங்குள்ள 95 சதவீத கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மரியுபோல் நகரை கடந்த 6 வாரங்களாக முற்றுகையிட்டு கடுமையான தாக்குதலை நடத்திய ரஷிய படைகள் அந்நகருக்குள் பெருமளவில் முன்னேறியுள்ளது.
 இதனால் மரியுபோல் நகரை விரைவில் ரஷியா கைப்பற்றும் நிலை உள்ளது. உக்ரைன் படையினர் எதிர்த்து போராட முடியாத நிலையில் உள்ளனர். மரியுபோலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் சரண் அடைந்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.
05.50: ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்தார்.

உக்ரைனுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை அளித்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார். மேலும், கீவ் நகருக்கு வந்து ஆதரவு தெரிவித்த நேட்டோ நாடுகளைச் சேர்ந்த அதிபர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

02.45: ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், பல நாடுகள் உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன.

நேட்டோ உறுப்பு நாடுகளான போலந்து, லிதுவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகியவற்றின் அதிபர்களான ஆண்ட்ர்செஜ் துடா, கிடானஸ் நவ்சேடா, எகிலிஸ் லெவிட்ஸ், அலார் காரிஸ் ஆகியோர் நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

00.15: உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்மூலம் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்கள், வெடிபொருட்கள், ராக்கெட்டுகள், மருந்துப்பொருட்கள் உள்பட பல்வேறு ராணுவ ஆயுதங்களை அமெரிக்கா வழங்குகிறது.

ஏற்கனவே உக்ரைனுக்கு 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.