அமெரிக்காவின் மேரிலாந்து பகுதியில் 100க்கும் மேற்பட்ட பாம்புகளை செல்லப்பிராணிகளாக வளர்த்த டேவிட் ரிஸ்டன்(49) என்பவர் பாம்பு கடித்ததில் உடலில் விஷம் ஏறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவின் மேரிலாந்து பகுதியில் டேவிட் ரிஸ்டன்(49) என்பவர் 14 அடி நீளமுள்ள பர்மிய மலைப்பாம்பு உட்பட நாகப்பாம்புகள், கருப்பு மாம்பாக்கள் மற்றும் ராட்டில்ஸ்னேக்ஸ் போன்ற விஷமுள்ள மற்றும் விஷமில்லாத 124 பாம்புகளை தனது வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.
இந்தநிலையில் டேவிட் ரிஸ்டனை அவரது அக்கம்பக்கத்தினர்கள் 24 மணிநேரத்திற்கு மேலாக அவரது வீட்டருகே பார்க்காத நிலையில், சந்தேகப்பட்டு அங்குள்ள காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவரது வீட்டிற்கு சோதனையிட வந்த காவல் துறையினர் டேவிட் ரிஸ்டன் சுயநினைவு இல்லாமல் தரையில் விழுந்து கிடப்பதை பார்த்து அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அவர் அதற்கு முன்பாகவே இறந்துவிட்ட நிலையில், மருத்துவமனையில் அவரை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர், டேவிட் ரிஸ்டன் பாம்புக்கடிதத்தில் விஷம் ஏறி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, டேவிட் ரிஸ்டன் சுயநினைவு இல்லாமல் தரையில் விழுந்து கிடந்ததை பார்த்த சார்லஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தின் அதிகாரி, மேரிலாந்து பகுதியில் இவ்வாறு பாம்புகளை வளர்ப்பது தடைசெய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் டேவிட் ரிஸ்டன் இவ்வாறு தனது வீட்டில் 100க்கும் மேற்பட்ட பாம்புகளை வளர்க்கிறார் என அவரது அக்கம்பக்கத்தினருக்கு தெரியவில்லை என அப்பகுதியின் தலைமை விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
பின்லாந்து வளைகுடாவில் ரஷ்ய கடற்படைகள்: பாதுகாப்பு துணைத்தலைவர் எச்சரிக்கை!