6 கெமிக்கல் பங்குகளை வாங்கி போடுங்க.. லாபம் கிடைக்கலாம்.. நிபுணர்கள் பரிந்துரை!

ஒரு பங்கினை வாங்கும் முன் அந்த நிறுவனம் என்ன செய்கிறது? இந்த பங்கில் பணம் போட்டால் லாபம் கிடைக்குமா? வாங்கலாமா? வேண்டாமா? என்று ஆய்வு செய்து முடிவெடுப்பது நல்லது.

அந்த வகையில் நாட்டின் முன்னணி தரகு நிறுவனமான ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் சில பங்குகளை வாங்கலாம் என மதிப்பீஃபு செய்துள்ளது.

ஏன் இந்த பரிந்துரையை செய்துள்ளது? கவனிக்க வேண்டிய காரணிகள் என்னென்ன? குறிப்பாக ஏன் கெமிக்கல் துறையை சேர்ந்த பங்குகளை மட்டும் பரிந்துரை செய்துள்ளது வாருங்கள் பார்க்கலாம்.

சீரிஸ் 3 : டீமேட் என்றால் என்ன.. இதனை எப்படி தொடங்குவது?

லாபகரமான துறை

லாபகரமான துறை

இந்தியா மட்டும் அல்ல, உலகம் முழுவதிலும் எதிர்காலத்தில் கெமிக்கல் துறையானது நல்ல லாபகரமான துறையானது இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். கெமிக்கல் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் சீனா, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற முயற்சித்து வருகின்றது. அதே நேரம் சர்வதேச அளவில் தேவையானது அதிகரித்து வருகின்றது. ஆக இது கெமிக்கல் நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய கெமிக்கல் நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

வருவாய் உச்சம்

வருவாய் உச்சம்

சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு மூலதன பொருட்கள் விலையானது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பணவீக்கத்தின் அளவு உச்சம் தொடடுள்ளது. இதற்கிடையில் கெமிக்கல் துறையின் வருவாய் விகிதமானது கடந்த ஆண்டினை காட்டலும் 34%மும், கடந்த காலாண்டினை காட்டிலும் 9%மும் அதிகரித்துள்ளது.

பங்குகளை வாங்கலாம்
 

பங்குகளை வாங்கலாம்

குஜராத் ப்ளூரோகெம் (Gujarat Fluorochem) – இலக்கு விலை – ரூ.3356

செம்பிளாஸ்ட் சன்மார் (Chemplast Sanmar ) – இலக்கு விலை – ரூ.910

இபிஎல் (EPL ) – இலக்கு விலை – ரூ.260

சுதர்சன் கெமிக்கல் (Sudarshan Chemical) – இலக்கு விலை – ரூ.683

தத்வ சிந்தன் பார்மா கெம் (Tatva Chintan Pharma) – இலக்கு விலை – ரூ.3000

பிலிப்ஸ் கார்பன் பிளாக் (Phillips Carbon Black) – இலக்கு விலை – ரூ.147

சில பங்குகள் விலை குறையலாம்

சில பங்குகள் விலை குறையலாம்

சில பங்குகளை வாங்க பரிந்துரை செய்துள்ள நிலையில், சில பங்குகளின் விலையானது குறையலாம் என்றும் மதிப்பிட்டுள்ளது. ஆக இதில் செல்லிங் இலக்குகளையும் கொடுத்துள்ளது.

எஸ் ஆர் எஃப் (SRF ) – செல்லிங் இலக்கு விலை – ரூ.2141 (CMP – 2611)

க்ளீன் சயின்ஸ் (Clean Science) – செல்லிங் இலக்கு விலை – ரூ.2110 (CMP – )

கேலக்ஸி சர்பேக்டன்ஸ் (Galaxy Surfactants ltd) – செல்லிங் இலக்கு விலை – ரூ.2710 (CMP – 2966.55)

ரோசாரி பயோடெக் (Rossari Biotech) – செல்லிங் இலக்கு விலை – ரூ.1047 (CMP – 989.35)

நவீன் புளோரின் (Navin Fluorine) – செல்லிங் இலக்கு விலை – ரூ.3550 (CMP – 3934)

முக்கிய காரணம்

முக்கிய காரணம்

ரோசாரி பயோடெக் பங்கில் சமீபத்திய கையகடுத்தலானது எதிரொலிக்கலாம். தத்வா சிந்தன் பார்மா கெம் ஆட்டோ துறையில் நிலவி வரும் சரிவுக்கு மத்தியில் பாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்ஜ்க்கப்படுகிறது. இதே க்ளீன் சயின்ஸ் விலை அதிகரிப்பினால் பலன் கண்டுள்ளது.கேலக்ஸி சர்பேக்டன்ஸ் நிறுவனத்தின் விற்பனை மந்தமாகலாம். இதே இபிஎல் மற்றும் சுதர்சன் நிறுவனங்கள்அதிக செலவினங்களை எதிர்கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுஇறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

analysts recommended to buy these 6 chemical stocks

analysts recommended to buy these 6 chemical stocks/6 கெமிக்கல் பங்குகளை வாங்கி போடுங்க.. லாபம் கிடைக்கலாம்.. நிபுணர்கள் பரிந்துரை!

Story first published: Thursday, April 14, 2022, 10:43 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.