நியூஸ் ரீடராக நமக்கு பரிச்சயமான முகம் சுஜாதா பாபு; விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பீஸ்ட் அனுபவம் குறித்து அவர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
கிட்டத்தட்ட 23 வருஷமா நியூஸ் ரீடராக இருந்துட்டு அதை மாற்றி சினிமாவில் நடிகையாக என்னை நிரூபிக்கணும் என்கிற எண்ணம் இருந்தது. நியூஸ் ரீடராக நம்மளோட முகம் பலருக்கும் தெரிஞ்சிருக்கும் அது பிளஸ் ஆக இருந்தாலும் சினிமாவுக்குள்ள போகும்போது இவங்களுக்கு எல்லாம் தெரியும்னு நினைச்சிடுறாங்க அது மைனஸ். நேரடியா நமக்கு ஷாட் வச்சு இவங்க நடிச்சிடுவாங்கன்னு நம்ம மேல வைக்கிற நம்பிக்கையை காப்பாற்றணும் அது மிகப்பெரிய பொறுப்பு.
ஆரம்பத்தில் சின்ன, சின்ன கேரக்டரில் பண்ணேன். பிறகு, `ஓ மை கடவுளே’ படத்தில் ஹீரோவுக்கு அம்மாவாக நடிச்சேன். அந்தப் படத்தில்தான் இன்னும் என்னை அதிகம் மாத்திக்கணும்னு தெரிஞ்சது. அதுக்கு பிறகு கோவிட் வந்துடுச்சு. அந்த சமயம் யாருக்கும் எந்த வாய்ப்பும் அமையல. நம்மளுடைய அடுத்த ஸ்டெப் என்னவாக இருக்கும்? மறுபடியும் ஜீரோவில் இருந்து ஆரம்பிக்கணுமான்னுலாம் யோசிச்சேன். அப்ப தான் பீஸ்ட் படத்திற்காக உங்களை செலக்ட் பண்ணியிருக்கோம். நாளையில் இருந்து ஷூட்டிங்னு சொன்னாங்க. பயங்கர ஹாப்பி ஆகிட்டேன். அதைவிட நம்மளை நம்பி கூப்டுறாங்க.. தப்பு பண்ணிட கூடாதுன்னு ரொம்ப கவனமா இருந்தேன்.
ஷூட்டிங் நான் போனதும் எனக்கு ஷாட் வைக்கல. அதனால அந்த சூழல் எனக்கு நல்லா புரிஞ்சது. அடுத்து எனக்கு ஷாட் வைக்கும்போது இயல்பா நடிக்க முடிஞ்சது. நான் அங்கே நடிச்சிட்டு இருந்தப்பவே சோசியல் மீடியாவில் நான் விஜய் சாருக்கு அம்மாவாக நடிக்கிறேன் என்கிற நியூஸ் வைரலாக ஆரம்பிச்சது. ஒருநாள் செட்ல தளபதியே என்கிட்ட கேட்டாரு.. சுஜாதா பாபு தான் தளபதிக்கு அம்மான்னு சொல்றாங்க… பாத்தீங்களான்னு சிரிச்சிட்டே கேட்டாரு. செட்ல ரொம்ப அமைதியா இருப்பார். எல்லா நியூஸ் பற்றியும் அப்டேட்டாக இருப்பார். லீவு போட்டு ஷூட்டிங் போனதால என்னால நியூஸ் அப்டேட் பண்ணிக்கவே முடியல. 2,3 தடவை செய்தி குறித்து என்கிட்ட டிஸ்கஸ் பண்ணும்போது இவர் எப்படி இவ்ளோ அப்டேட் ஆக இருக்கார்னு தோணியிருக்கு. அதே மாதிரி, `சர்கார் படத்தில் நான் நியூஸ் வாசிச்சேன்னு’ சொல்லவும் `ஆமாங்க.. நீங்க தானே வாசிச்சீங்கன்னு’ சொல்லி சந்தோஷப்பட்டார்.
செட்ல எல்லாரோடையும் ஜெல் ஆகிட்டேன். சதீஷ்லாம் பேச ஆரம்பிச்சாருன்னா சிரிச்சிட்டே இருக்கலாம். பயங்கரமான என்டர்டெயினர். பூஜா ஹெக்டே பயங்கர ஃப்ரெண்ட்லி. அவங்களுக்கு பர்சனல் குக் ஒருத்தங்க இருக்காங்க. செட்ல என்னைத் தவிர எல்லாரும் நான் வெஜ். வெரைட்டி, வெரைட்டியா நான் வெஜ்ல சாப்பிட்டுட்டு இருப்பாங்க. நான் மட்டும் சாம்பார் சாதம், தயிர் சாதம்னு சாப்பிடுவேன். அதை கவனிச்சிட்டு பூஜா அவங்க குக்கிட்ட சொல்லி எனக்காக ஸ்பெஷலா வெஜ்ல சமைச்சு கொடுத்தாங்க. செட்ல யாருக்கும் எந்த பந்தாவும் கிடையாது. இயல்பா ஃப்ரெண்ட்லியா இருப்பாங்க. அபர்ணா தாஸூம், நானும் ரொம்ப க்ளோஸ் ஆகிட்டோம்.
என் ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். படம் ரிலீஸானதும் வீட்டுக்கு வந்து கேக் வெட்டி, மாலை போட்டு, வைர மூக்குத்தி பரிசளித்து அமர்க்களம் பண்ணிட்டாங்க. பீஸ்ட்டிற்காக 30 நாள் லீவு போட்டப்பவும் ஆபிஸ்ல எல்லாரும் அட்ஜெஸ் பண்ணிக்கிட்டாங்க. என்னை விட என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் நான் நடிச்சிருக்கேன்னு பல மடங்கு சந்தோஷம், பெருமை! ரொம்ப சந்தோஷமா குஷியா இருக்கேன்!’ என்றார்.