KGF 2 எடிட்டர்: 19 வயது யூ டியூபருக்கு குவியும் பாராட்டு

KGF 2 Movie Editor Update In tamil : பிரபல கன்னட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் தாயாரான கேஜிஎஃப் 2 திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு வெளியாக கேஜிஎஃப் முதல் பாகம் பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து 2-வது பாகம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்துள்ளது.

உலகம் முழுவதும் கேஜிஎஃப் 2-வது பாகம் இப்படம் மிகப்பெரிய ஓப்பனிங்ஸ் பெற்றுள்ளது. யாஷின் அட்டகாசமான நடிப்பு. விறுவிறுப்பான திரைக்கதை, பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகள் என படம் முழுவதும் இயக்குநர் பிரஷாந்த் நீல் தனது எழுத்தின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார்.  

ஆனால் இந்த படத்தின் வெற்றிக்கு அவர் ஒருவர் மட்டுமே காணம் என்று சொல்லிவிட முடியாது. இயக்குநர் என்ன நினைக்கிறாரே அதை திரையில் கொண்டு வரவேண்டியது தொழில்நுட்ப கலைஞர்களின் பொறுப்பு. அந்த வகையில் இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் ரசிகர்கள் மத்தியில் பெரிய பாராட்டையும் வரவேற்பையும் பெற்று வருகின்றனர்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த படத்தின் எடிட்டிங் விமர்சகர்கள் ரசிர்கள் மத்தியில் பெரிய பாராட்டை பெற்றுள்ளது. உஜ்வால் குல்கர்னி என்ற 19 வயது இளைஞர் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். யூடியூப் வீடியோக்கள் மற்றும் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட வீடியோக்களை எடிட் செய்து பிரபலமான உஜ்வல் குல்கர்னியின் சிறப்பான பணியை பார்த்த இயக்குனர் பிரசாந்த் நீல், கேஜிஎஃப் 2 படத்தில் எடிட்டிங் பணியை வழங்கியுள்ளார்.

 மேலும் படத்தை பார்த்த அனைவரும் அவரது பணியை பாராட்டி வருகின்றனர். தவிர, அவரது பணி பல திரைப்பட தயாரிப்பாளர்களை ஈர்த்துள்ளது, நிச்சயமாக, அவர் விரைவில் பல திரைப்படங்களுக்கு எடிட்டிங் பணிக்கு கமிட் ஆவார் என்று கூறி வருகின்றனர்.

 “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.