Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 8-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110. 85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ் புத்தாண்டு தொடங்கியது!
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழ் சூரிய நாட்காட்டியின் முதல் மாதமான சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது. அதன்படி சித்திரை முதல் நாளான இன்று ‘சுப கிருது’ புத்தாண்டை முன்னிட்டு, மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளில் பங்கேற்றனர். இதனால் அதிகாலையிலே பல கோயில்களில் மக்கள் கூட்டம் குவிந்தது.
ஆளுநர் தேநீர் விருந்து.. அரசியல் கட்சியினர் புறக்கணிப்பு!
ஆளுநர் ஆர்.என்.ரவியின் தமிழ் புத்தாண்டு தேநீர் விருந்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது. தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் ஆளுநர், சித்திரை நாள் தேநீர் விருந்துக்கு அழைப்பது தமிழகத் தலைவர்களை கேலி செய்வது போல் உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சிளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இலங்கைக்கு நிலை நமக்கும் ஏற்படும்.. ப.சிதம்பரம்!
இந்தியாவின் சில்லறை பணவீக்கம், 7 ச தவீதத்தை தாண்டி விட்டதால், இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை நமக்கும் ஏற்படும் அபாயம் உள்ளது. ஒரே நாடு- ஒரே தேர்வு முறை, ஒரே நாடு- ஒரே ரேஷன். ஒரே நாடு- ஒரே தேர்தல் என்றால் இது சர்வாதிகாரா நாடா என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Tamil Nadu news live update
சமத்துவ நாள்.. மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்!
அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாள் விழாவை திமுக உறுப்பினர்கள் கொண்டாட வேண்டும். திமுக அலுவலகங்களிலும், 238 சமத்துவபுரங்களிலும் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
IPL 2022: ஐபிஎல் போட்டியில் மும்பை-பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான நேற்றைய ஆட்டத்தில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. 199 ரன்கள் இலக்குடன் விளையாடிய மும்பை 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டுதல்!
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலை வாய்ப்பு சார்ந்து 4 நாட்களுக்கு பல்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
“ “
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கே.ஜி.எஃப்-2’ திரைப்படம் உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் இன்று வெளியானது.
விருதுநகர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி,மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழந்தனர். அவர்களின், குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்தித் திணிப்புக்கு எதிரான கருத்தைக் கூறியதால் ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடியை ஏற்படுத்த முயன்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நாடாளுமன்ற எம்.பி.க்கள் பரிந்துரை கடிதம் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மறு உத்தரவு வரும்வரை,பரிந்துரை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் இன்று காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் நடைபெற உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு, பக்தர்களுக்கு அனுமதி வழங்கியதால், திரளான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர்.