உக்ரைனுக்கு தொடர்ந்து உதவினால் எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்காவுக்கு ரஷ்ய எச்சரிக்கை விடுத்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
ரஷ்யா அமெரிக்காவுக்கு அனுப்பிய வெளியுறவுத்துறை குறிப்பின் நகல் கிடைத்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த குறிப்பில், உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் வழங்கினால் அமெரிக்கா எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்ய எச்சரித்துள்ளது.
கீவ்வை ஏவுகணைகளால் தாக்கி அழிப்போம்! ரஷ்ய அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவும் அதன் நாட்டு நாடுகளும் பொறுப்பற்ற வகையில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
இது பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்கு எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 50 நாட்களாக படையெடுத்து வரும் நிலையில், இரு தரப்பும் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளன.
இதனிடையே, ரஷ்யாவிடமிருந்து நாட்டை பாதுகாக்க ஆயுதங்கள் தந்து உதவுமாறு உக்ரைன் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தது.
உக்ரைனின் கோரிக்கை ஏற்று அமெரிக்கா, பிரித்தானியா உட்பட சில நாடுகள் உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்களை வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.